மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும். திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பெளர்ணமி நாளில் விரதம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய 10 தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.
அத்தகைய சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜ பெருமாளை கண்டு களித்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். மேலும் இந்த விரதம் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக தமிழக பெண்கள் சோமவார விரதம், காரடையான் நோன்பு, ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு விரதம் என கணவனுக்காக அம்மனிடம் வேண்டிக் கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில் மார்கழியிலும் திருவாதிரை நாளில் பெளர்ணமியின் முழுநிலவும் இணைந்திருக்க விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாள் அற்புதமான நாள். இந்த நாளில் தாலி சரடு மாற்றலாம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும் போதும் கணவர் கையினால் தாலி கயிற்றை அல்லது சரடை கட்டிக்கொண்டால் சிறப்பு என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
விரதம் இருக்கும் முறை:
திருவாதிரை விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து உணவு உண்ணாமல் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும்.
பகல் முடிந்து இரவு வந்ததும் நோன்பு ஆரம்பமாகும். மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி விபூதி,சந்தனம், குங்குமம் இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். அப்படி விரதம் இருக்காதவர்கள் வீட்டில் வடை, பாயாசம் செய்து வழிபடலாம். சாதம், சாம்பார், களி செய்யலாம். அத்துடன் 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம்.
பிறகு மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குல தெய்வத்திற்கு படையல் போட்டு அதை கணவருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அத்துடன் முக்கியமாக யாருகாவது உணவு தானம் செய்ய வேண்டும்.
விரதத்தின் பலன்கள்:
இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவ பார்வதியின் அருள் கிடைக்கும். தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். சிவ ஆலயம் சென்று ஆருத்ரா தரிசனம் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fasting