முகப்பு /செய்தி /ஆன்மிகம் / அகல் விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

அகல் விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

அகல் விளக்கு

அகல் விளக்கு

Agal Vilakku | ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளக்குகளிலே அம்பாள் குடியிருக்கிறார் என்றும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இந்து மதத்தில் மட்டுமின்றி வேறு மதங்களும் அகல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அகல் விளக்கை இந்த திசையில் ஏற்றுவதால் கடன் சுமை மற்றும் கஷ்டங்கள் அதிகரிக்குமாம். எந்தெந்த திசையில் அகல் விளக்கை ஏற்றினால், என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

கோவில்களில் மட்டுமின்றி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது... விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காண முடியும். ஆனால், அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மை மற்றும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளது...

கிழக்கு திசை : அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பெயரும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு திசை : மேற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால், உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விளகம்.

வடக்கு திசை : வடக்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.

Also see... கார்த்திகை தீபத்தன்று பழைய விளக்குகளை ஏற்றலாமா?

தெற்கு திசை : தெற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் எதிர்பாராத தொல்லைகள், கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பஞ்சு திரி: பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்

தாமரை தண்டு திரி:  தாமரை தண்டு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் முன் பிறவி பாவங்கள் அகலும், செல்வம் பெருகும்.

வாழை தண்டு திரி: வாழை தண்டி திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு பட்டை திரி: வெள்ளெருக்கு பட்டை திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் செய்வினை விலகும், ஆயுள் அதிகரிக்கும்.

First published:

Tags: Hindu Temple