முகப்பு /செய்தி /ஆன்மிகம் / முருகன், சுக்ரன் அருள்.. வெள்ளிக்கிழமை விரதம் கொடுக்கும் பலன்கள்.. விரத முறைகள் இதோ!

முருகன், சுக்ரன் அருள்.. வெள்ளிக்கிழமை விரதம் கொடுக்கும் பலன்கள்.. விரத முறைகள் இதோ!

அம்மன்

அம்மன்

வெள்ளிக்கிழமை மங்களம் நிறைந்த நாள். செல்வ செழிப்பு நிறைந்த நாளான வெள்ளிக் கிழமையில் மங்கள நிகழ்ச்சி நடத்துவதற்கும், கடன் வாங்குதல், வாகனம் வாங்குதல், விலை உயர்ந்த பொருட்களான நகை ஆபரணங்கள் வாங்கவும் உகந்தது. இந்த நாளில் சுப செலவு செய்யலாம் |

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை:

1. வெள்ளி கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும்.

2. பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

3. ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

4. விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியவைகள்:

1. கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும். வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில்

2. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.

3. வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும். அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.

4. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

5. வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

6. பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு.

7. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

First published:

Tags: God