Home /News /spiritual /

நாளை ஆனி அமாவாசை.. இதை மட்டும் தவறாமல் செய்துவிடுங்கள்.. கைமேல் பலன் கிடைக்கும்..

நாளை ஆனி அமாவாசை.. இதை மட்டும் தவறாமல் செய்துவிடுங்கள்.. கைமேல் பலன் கிடைக்கும்..

ஆனி அமாவாசை

ஆனி அமாவாசை

ஆனி அமாவாசை முழு நாளும் சர்வ அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த திருப்தி ஏற்படுத்தும். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் அகன்று விடும் என்பது நம்பிக்கை...

மேலும் படிக்கவும் ...
    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆனி மாத அமாவாசை பிறக்கிறது. அன்றைய தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    வழிபடுமுறை

    ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து  விட்டு, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் வைத்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி , அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டியை கழித்திட வேண்டும்.

    பலன்கள்

    ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எகாரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Worship forefathers

    அடுத்த செய்தி