• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Aadi Velli: ஆடி வெள்ளியின் சிறப்புகள்

Aadi Velli: ஆடி வெள்ளியின் சிறப்புகள்

ஆண்டாள்

ஆண்டாள்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, சாக்கை ஊற்றுதல் திருவிழா, செடல் திருவிழா, உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் கோலாகலமாக நடைபெறும்.

  • Share this:
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் 4வது மாதமான ஆடி மாதம் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கன்னி பெண்களும் திருமணமான சுமங்கலிகளும் தவறாமல் விரதம் இருந்து வருவது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர்.

மேலும் இந்த விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிடைக்கும். கன்னி பெண்களுக்கு திருமணமாகும் என்றும் சுமங்கலி பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருவது வழக்கம்.முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி வெள்ளிகளில் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4 வது வாரம் காய் அலங்காரமும் 5 வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள்.

மேலும் படிக்க... ஆடி மாதத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று, சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டி மகாலட்சுமியை பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள். தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் வேண்டி அம்மனுக்கு விரதம் இருப்பார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமை  விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அத்துடன்  கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க.. ஆயிரம் கண்ணுடையாள் எங்கள் சமயபுரம் மாரியம்மன்..

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தகுந்த வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். நல்ல லாபம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும்.

ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதையின் வழிபாடும் சிறப்பானது. புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் என மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும் படிக்க... எந்த தெய்வத்தை எப்போது வணங்குதல் சிறப்பு?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: