• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வீட்டில் எப்போது லக்ஷ்மி கலாட்சம் நிறைந்து செய்யும் தொழில் மேன்மை அடைந்து செல்வம் கொழிக்க வலம்புரி சங்கு மிகவும் சிறந்த ஒன்று.

 • Share this:
  சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது.
  சங்குகளில் பல இனங்கள் உண்டு அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்த சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடம். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

  மேலும் தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்கே மகாவிஷ்ணுவின் இடது கையில் இடம்பெற்றுள்ளது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும், ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ  ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

  வலம்புரி சங்கை எளிமையாக வழிபடும் முறை

  ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தன்றோ, புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியன்றோ, ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியன்றோ, அல்லது சித்திரை மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்றோ, அல்லது இவையனைத்து நாட்களிலுமோ, இரவில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு ஸ்ரீ மகாலட்சுமியின் மீது அமைந்த ஏதாவது ஒரு ஸ்துதியையோ, மந்திரத்தையோ சொல்லி அந்தத் திருமகளை எளிய முறையில் பூஜித்து வந்தால் போதும், நம்முடைய குறைகள் யாவுமே மெல்ல மெல்ல விலகி வாழ்வில் நல்லது நடக்கும்.

  மேலும் படிக்க... இந்த வார ராசிபலன் | யாருக்கெல்லாம் யோகம் தெரியுமா? (நவம்பர் 07 -13)

  பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும் என்பது ஐதீகம்.

  ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

  வலம்புரி சங்கினால் கிடைக்கும் நன்மைகள்

  எத்தனையோ சங்குகள் கிடைத்தாலும், அரிதினும் அரிதான வலம்புரி சங்கு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. வலம்புரி சங்கு எங்கெல்லாம் இருகின்றதோ, அங்கு கண்டிப்பாக திருமகள் குடி கொண்டிருப்பாள் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்யும் எந்த வேலையும் தடை இல்லாமல் நடக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதேபோல் தான் வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துஷ்ட சக்திகள் எதுவும் அண்டாது.

   

  மேலும் படிக்க... Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (நவம்பர் 07, 2021)

  மேலும் கண்திருஷ்டி படாது, எதிரிகள் ஒதுங்கி போவார்கள். கடன் பிரச்சினை நீங்கும். மேலும் எதிர் மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் மறைந்து நல்ல சக்திகள் உள்ளே வரும் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகம்.

  மேலும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம் லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

  மேலும் படிக்க... செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: