புரட்டாசியில் பிறந்தால் புரட்டி எடுப்பார்கள் என்று பயப்படுவார்கள். இது தவறானது. புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். மழை மாதம் புரட்டாசி. பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தாக்கும் என்பதால்தான் புரட்டாசிமாதம் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லை. வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி. அதனால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய விசயங்களை எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
மேலும் தெய்வீக தன்மை கொண்ட மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறப்பான அறிவு வளமும், செல்வ வளமும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
கல்வியில் சிறந்தவர்கள்
புதன் அறிவுக்கான கடவுளாக விளங்குவதால், புரட்டாசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை அனைத்து நூல்களையும் கற்று மிகவும் அறிவாளியாகவும், தத்துவங்கள், விளக்கங்கள் சொல்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்காது. அதே போல் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லும் சாமர்த்தியசாலியாக இருப்பர். இவர்கள் மற்றவரின் மனதை படிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள். அதே சமயம் மற்றவர்களால் இவரின் மனதை அறிய முடியாதவர்களாக இருப்பார்கள். மற்றவரின் மனதை புண்படுத்த மாட்டார்கள். அதோடு ஒருவரின் கருத்தை கற்பூரம் போல மிக கட்சிதமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.
இவர்களின் வீட்டில் செல்வம் இருக்கோ இல்லையோ, புத்தகங்கள் அதிகமாக வாங்கி குவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே போல் புத்தகத்தை படித்து தேவையானதை மனப்பாடம் செய்யாமல், அதன் உட்கருத்தை புரிந்து கொண்டு தேவையான இடங்களில் விளக்க வல்லவர்கள்.
தலைமை பதவி கிடைக்கும்
புரட்டாசியில் பிறந்தவர்கள் எதையும் தெளிவாக பேசி தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். நேர்மையானவர்கள். நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்து வராது. இவர்களின் குணத்தால் எளிதில் பகையை சம்பாதிப்பார்கள் மனக்கசப்பும் ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சூரியன், சனி பலமாக இருந்தால் ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் இருப்பார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் கை கொடுக்கும். தலைமை பதவிகள் தேடிவரும்.
தொழில் வருமானம்
புத்திசாலித்தனம் கொண்ட இவர்கள் மூளையை உபயோகித்து ஜெயிப்பார்கள். கலைத்துறையில் சாதிப்பார்கள். கற்பனை சக்தி கொண்டவர்கள். சிறந்த எழுத்தாளர்கள், சினிமா துறையில் ஜெயிப்பார்கள். பத்திரிகைதுறையில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். நகை, ஜவுளித்துறையில் கொடிகட்டிப்பறப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள்.
இவர்கள் காவல்த்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை, வனத்துறை போன்ற துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் தங்களின் குழந்தைகளால் சிறப்பான பாக்கியம் அடையும் வாய்ப்புள்ளவர்கள். குழந்தைகளை சிறப்பாகவும் வளர்ப்பார்கள். குரு, சனி பலமாக இவர்களை பார்ப்பதால் குழந்தைகளால் ஏற்றம் பெறுவர். புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையை மிகவும் விரும்புபவர்களா இருப்பார்கள்.
மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?
குறைகளும் உண்டு
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மனதில் நினைத்தால் அதை முடிக்க இறுதி வரை போராட மாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் படிக்க... செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New born baby, Purattasi