முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பல்லி இடது கையில் விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பல்லி இடது கையில் விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

benefits of lizard fall | இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

benefits of lizard fall | இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

benefits of lizard fall | இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது. அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பக்கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.

மேலும் வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

இடது கை மற்றும் காலில் பல்லி:

நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

வலது கை மற்றும் காலில் பல்லி:

நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

பாதத்தில் பல்லி விழுந்தால்:

பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

தொடையில் பல்லி விழுந்தால்:

தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

மார்பு மீது பல்லி விழுதல்:

வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

கழுத்தில் பல்லி விழுந்தால்:

இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.

First published:

Tags: Lizard