ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கந்தசஷ்டி 2022 : விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் என்னென்ன?

கந்தசஷ்டி 2022 : விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் என்னென்ன?

முருகன்

முருகன்

kandha shasti viratham 2022 | சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2022 ஆண்டின் மகா கந்தசஷ்டி விரதம் முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையில் (இன்று) இந்த ஆண்டு துவங்குகிறது. அவ்விரதம் இருக்கும் முறை, அதன் பலன்கள் என்னென்ன என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

   வேண்டும் வரம் அனைத்தும் வாரி வழங்கும் மகா கந்தசஷ்டி விரதம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் அக் டோபர் 25 துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி நிறைவடைகிறது. வழக்கமாக பிரதமையில் துவங்கும் கந்தசஷ்டி விழா இந்த ஆண்டு 25 ஆம் தேதி வரும் அமாவாசையில் துவங்குகிறது என்னும் குழப்பம் எழலாம். கிரஹணத்தின் காரணமாக அமாவாசை மாலையிலே முடிந்து பிரதமை அன்றே துவங்குகிறது. அதனால் இந்த ஆண்டு கந்தசஷ்டியின் முதல் நாள் 25-10-2022

   விரதம் துவக்கம்:

  அக்டோபர் 25 காலையில் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை துவக்கி கொள்ளலாம். காலை காப்பு காட்டும் நல்ல நேரம் 6 மணி முதல் 8.45 மணிக்குள். கிரஹணம் வருவதால் மாலை 6.30 மணிக்கு மேல் குளித்துவிட்டு மாலையில் விரதம் துவங்குபவர்கள் 7.31 முதல் 8.30 மணிக்குள் காப்புக்கட்டி விரதத்தை ஆரம்பிக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை எப்பொழுது துவங்கினாலும் கிரஹணம் வருவதால் கட்டாயம் மாலை 6.30 மணிக்கு மேல் குளிக்க வேண்டும்.

  குழந்தை வரம் வேண்டுபவர்கள்;

   “சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை உண்டாகும்” என்பது மூத்தோர் மொழி. குழந்தை வேண்டுபவர்கள் இந்த விரதத்தை தம்பதியாக இருத்தல் வழிமுறையாகும். வீட்டில் மூத்தோரிடம் நல்லபடியாக விரதத்தை முடிக்க ஆசிபெற்று விரதத்தை துவங்கலாம்.

  Also see...கிருத்திகை என்றால் என்ன? கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

  தொழில் லாபம், வாழ்வின் முன்னேற்றம், முருகன் அடியார்கள்;

  கந்தபெருமான் மீது பக்தி கொண்டு வாழ்வின் தேவைகளை வேண்டி, நோயில்லா உடல், சிறப்பான கல்வி, குறைவில்லா தானியம், செல்வம், அழகு, அழியா புகழ், என்றும் இளமை, நுட்பமான அறிவு, குழந்தைப்பேறு, வலிமையான உடல், நீண்ட ஆயுள், எடுத்த காரியத்தில் வெற்றி, சிறப்பு மிக்க பெருமை, நல்ல விதி, துணிவு, சிறப்பான அனுபவம் என்னும் 16 வகை செல்வங்களை வழங்கும் விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

  விரதம் இருக்கும் முறை:

  இந்த விரதம் உண்ணாமல் இருக்க வேண்டும் . கடுமையாக விரதம் இருப்பவர்கள் 7 நாள் விரதத்தில் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாளில் இரண்டு மிளகு, என ஏழு நாட்கள் மிளகு உண்டு விரதம் இருப்பவர்கள் உண்டு. இளநீர் மட்டும் எடுத்து கொள்வது, பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது, சிலர் ஒரு வேளை உணவு உண்டு விரதமும், சிலர் காலை தவித்து மீதமுள்ள இரண்டு வேலைகள் உண்டும் விரதம் இருப்பார்கள்.

  அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து விரத முறையை தேர்ந்து எடுத்து கொள்வார்கள். இந்த விரதத்தில் தண்ணீர் அருந்துவது தோஷம் இல்லை. போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளலாம். பகலில் தூங்குவதை தவிர்ப்பது நலம். பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை விரத காலத்தில் உடுத்தி கொள்ளலாம்.

   வேலுண்டு வினையில்லை

  மயிலுண்டு பயமில்லை

  கந்தன் காப்பான்

  -விஷ்ணு நாகராஜன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kandha Sasti Kavasam, Murugan