ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இனி தடை இல்லை.. சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

இனி தடை இல்லை.. சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் விமானத்தில் தங்களுடன் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கும் வகையில் அதற்கான கட்டுபாடுகளை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தளர்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடன் தேங்காயை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.

  விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தேங்காயை தங்களுடன் பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சரக்குப் பகுதியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

  இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இருமுடியை தங்களுடனேயே எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது.

  Also see... நாளை கார்த்திகை அமாவாசை.. செய்ய வேண்டிய விரத முறைகள்.. கிடைக்கும் பலன்கள்!

  இது, அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும், எக்ஸ்ரே, வெடிபொருள் பரிசோதனை, நேரடி பரிசோதனை ஆகியவற்றை விமான பாதுகாப்புக் குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Coconut, Flight, Sabarimala, Sabarimalai Ayyappan temple