Bakrid 2021 | பக்ரீத் பண்டிகையும் தியாகமும்

பக்ரீத் பண்டிகையும் தியாகமும்

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

  • Share this:
    ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது.இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே  அழைக்கப்படுகிறது.

    மேலும் பொருளாதாரம் சிறப்பாய் இருக்கும் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ பயணம் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் பயணம் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதே ஆகும். புனிதப் பயணக் கிரியைகள், கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதல் ஆகும்.பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவதும் தியாகத் திருநாளான பக்ரீத் நாளின் முக்கிய அம்சம். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்துகொள்கின்றனர்.

    பக்ரீத் தோன்றியது எப்படி



    நபி இப்ராஹிம் தனது காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின்போது, அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்குப் பயணம் சென்று அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைப்பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள் குழந்தைகள் இல்லை. இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹிம், புத்திரப் பாசம் கிடைக்காமல் ஏங்கினார். அப்போதுதான் மிகப் பெரும் அருட்கொடையாக இப்ராஹிமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயில் பிறந்தார். இதனால் இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்குநாள் பெருகியவண்ணம் இருந்தது.



    ஒருமுறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவுதான் அது. இதனால் நபி கவலையில் ஆழ்ந்தார். தாம் கண்ட கனவை இப்ராஹிம் நபி, தம்முடைய அன்பு மகனிடம் கூறினார். இறைப்பற்றில் அளப்பரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த இப்ராஹிம் நபிக்கு பிறந்த பிள்ளை, தந்தையவர் கருத்துக்கு மாறாகச் செயல்பட வாய்ப்பே இல்லையே. ‘‘கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுங்கள் தந்தையே என்று தன்னுடைய தந்தையிடம் நபி இஸ்மாயில் பணிந்தார்.






    தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கோடாரியையும் அவரே கொண்டுவந்து கொடுத்தார். இப்போது தந்தையவர் கைகளிலே வெட்டும் கோடாரி, கோடாரியின் கூர்முனையில் மைந்தர் நபி இஸ்மாயில் கழுத்து இருந்தது. அந்தச் சமயம்தான், எங்கிருந்தோ வந்த ஒரு குரல் அல்லது ஓர் அழுத்தம் அல்லாஹ்வின் எண்ணமாக எழுந்து நின்றது.  ‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த ‘பலி’யைத் தடுத்தார்.

    இறைச்சி பலியிடல்

    மேலும், அங்கே ஓர் ஆட்டை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு  கட்டளையிட்டார். மைந்தன் நபி இஸ்மாயில் உயிரையே பலி கொடுக்க துணிந்த அந்தத் தந்தையின் தியாகத்தைப் புகழ்ந்து, அந்த நரபலியைத் தடுத்து, நிறுத்தியது இறைவன் அல்லாஹ்வின் அன்பு.





    அந்த நாளின், சம்பவத்தின் நினைவாக  ஓர் ஆட்டினைப் பலியிட்டு, அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து சாப்பிடும்மாறு ‘இறை’ குரல் கூறியது. இதனால் நபி இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது. தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையே பாசத்தால் மறுதலித்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், அதற்கான மாற்றுவழியையும் கண்டெடுத்த அருமை மகனார் நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாள் எனப்படும், ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது.

    பகிர்ந்தளித்தல்

    பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து... ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்கிய விஷயமாகப் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.


    Published by:Vaijayanthi S
    First published: