தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது? தேதி அறிவித்த தலைமை ஹாஜி

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது? தேதி அறிவித்த தலைமை ஹாஜி
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அதிகாரபூர்வமாக செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பிறை தெரியாததால் ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்றும் தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜூலை மாதம் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.


மேலும் படிக்க...

வேலியில் சிக்கி காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பள்ளி சிறுவன் - பாராட்டிய வனத்துறையினர்

ஆகையால், வியாழக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். 
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading