• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு அறிவிப்பு... ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம்...

சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு அறிவிப்பு... ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம்...

சபரிமலை பக்தர்களுக்கு, கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவற்றை விலக்கிக் கொள்ளா விட்டால், நாடு முழுதும் உள்ள பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.

  • Share this:
    சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம், கோவை எட்டிமடை அமிர்தா கல்லுாரியில், நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்துக்கு, சமாஜத்தின் துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலர் ராஜன், அறங்காவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

    அப்போது கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தென் தமிழக நிர்வாக செயலா் ஜெயக்குமார், கோவை மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன்படி, ‘சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில், எரிமேலி யாத்திரைக்கு அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பம்பையில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். நெய் அபிஷேகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். கேரள சுகாதாரத்துறை அமைச்சர், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இக்கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்நிலையில் இன்றும் தொடர்ந்து செயற்குழு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... கந்தசஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: