ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Sabarimala Makara Jyothi 2023 : சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதியாக காட்சியளித்தார் ஐயப்பன்... சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...

Sabarimala Makara Jyothi 2023 : சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதியாக காட்சியளித்தார் ஐயப்பன்... சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...

மகர ஜோதி

மகர ஜோதி

Sabarimala Makara Jyothi 2023 : முன்னதாக இன்று மகர விளக்கு பூஜையை ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதியாக காட்சியளித்த  ஐயப்பனை சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் அங்கு மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். முன்னதாக இன்று மகர விளக்கு பூஜையை ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பம்பையில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட திரு ஆபரண பெட்டி வரலாற்று சிறப்பு மிக்க சரக்கொத்திக்கு 5.30மணிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் மற்றும் போர்க் கருவிகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  அங்கிருந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் திரு ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாலை 6.45 மணியளவில் கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி சொரூபமாக காட்சியளித்தார்.  இதனை சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

' isDesktop="true" id="872713" youtubeid="eQRBh784Qgk" category="spiritual">

பம்பை, புல்மேடு உட்பட 9 இடங்களில் ஜோதியை காண முடியும் என்ற போதும், பெரும்பான்மையான பக்தர்கள் ஜயப்பன் சன்னதியில் இருந்தே காண விரும்புவதால் கூட்டம் அலைமோதியது.  முன்னதாக மகர ஜோதி தரிசனத்தை காண நடிகர்கள் ஜெய்ராம், ஜெயம்ரவி, காளிதாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Magaravilakku, Sabarimalai Ayyappan temple