Home /News /spiritual /

ஆவணி அவிட்டம் 2022 | பூணூல் வகைகள் மற்றும் அதன் சிறப்புகள்.!

ஆவணி அவிட்டம் 2022 | பூணூல் வகைகள் மற்றும் அதன் சிறப்புகள்.!

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

Avani Avittam 2022 | ஆண் குழந்தை முதல் முதிய ஆண் வரை, ஒரு ஆணின் வயதுக்கு ஏற்றவாறு பூணூல் அணிய வேண்டும் என்ற நியமம் உள்ளது. பூணூல் வகைகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆண்டு முழுவதும் பல விதமான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் பெண்களுக்காக உள்ளன. இவற்றில், ஆண்களுக்கான விசேஷமாக, ஆவணி அவிட்டம் உள்ளது. ஆவணி மாதம் வரும் பௌர்ணமி நாளன்று, பூணூல் அணியும் வழக்கம் கொண்ட சமூகத்தினர், பழைய பூணூலை மாற்றி, புதிதாக அணிந்து கொண்டு வழிபடுவார்கள். ஆவணி அவிட்டம் என்பது பூணூல் மாற்றும் நிகழ்வு மட்டும் கிடையாது.

வேதங்களை படிக்கத் தொடங்குவதற்கான நாளும், கல்வி கற்பதற்கு உகந்த நாளுமாக திகழ்கிறது. பூணூல் என்பதில் பல வகைகள் உள்ளன. ஆண் குழந்தை முதல் முதிய ஆண் வரை, ஒரு ஆணின் வயதுக்கு ஏற்றவாறு பூணூல் அணிய வேண்டும் என்ற நியமம் உள்ளது. பூணூல் வகைகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கள்ளப்பூணூல்: முறையாக உபநயனம் செய்வதற்கு முன் விளையாட்டாக அணிவது

பிராமண சமூகத்தில், முதல் முறையாக ஆண் பிள்ளைக்கு பூணூல் அணியும் பைபவம் பெரிய விசேஷமாக நடக்கும். இதற்கு பெயர் உபநயனம். ஆனால், உபநயனம் செய்வதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று, வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளும் பூணூல் அணிய வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். எனவே, அவர்களுக்கும் பூணூல் அணிவிக்கப்படும். உபநயனம் செய்வதற்கு முன்பு, ஆசைக்காக அணிவிக்கப்படும் பூணூல் என்பதால், இது கள்ளப்பூணூல் என்று கூறப்படுகிறது. கள்ளப்பூணூல் அணித்து கொள்ளும் குழந்தைகள் அதை எப்போது வேண்டுமானாலும் கழற்றி விடலாம்.



 

பிரம்மச்சாரி பூணூல்: உபநயனம் முடிந்து திருமணம் ஆகும் வரை அணிவது

இந்துக்களின் வாழ்வில், குழந்தை கருத்தரிப்பு முதல், சந்நியாசம் வரை 16 சமஸ்காரங்கள் உள்ளன. அதில் உபநயனமும் ஒன்று. ஒரு சிறுவனுக்கு சுற்றமும் நட்பும் சூழ, முதல் முதலாக பூணூல் அணிவிப்பது தான் உபநயனம். உபநயனம் பொதுவாக 7 வயது முதல், ஒற்றைப்படை வயதில் செய்யப்படுகிறது.

Also Read : ஆவணி அவிட்டம் என்றால் என்ன? தேதி, முக்கியத்துவம் மற்றும் பூணூல் மாற்றும் முகூர்த்தம்.!

எந்த வயது சிறுவனாக இருந்தாலும், பூணூல் அணிந்தவுடன் பிரம்மச்சாரி என்று அழைக்கப்படுகிறான். பிரம்மச்சாரி என்பது திருமணமாகாத ஆண் என்பதைக் குறிக்கும். எனவே, எந்த வயதில் முதலில் பூணூல் அணிந்து கொண்டாலும், திருமணம் ஆகும் வரை 3 இழைகள் கொண்ட பூணூல் தான் அணிய வேண்டும்.



பூணூலில் உள்ள 3 இழைகள், மூன்று விதமான கடன்களைக் குறிக்கும்.

  • ரிஷி கடன் – உபநயனம் முடிந்த பின், தினமும் காயத்ரி ஜெபம் பாராயணம் செய்து , சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். இதன் மூலம் ரிஷி கடன் தீரும்

  • தேவ கடன் – உரிய பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்து, அல்லது கலந்து கொண்ட, தேவ கடனைத் தீர்க்க வேண்டும்

  • பித்ரு கடன் – தன்னை ஈன்றவர்களுக்கு, உரிய பித்ரு காரியங்களை செய்வதன் மூலம் பித்ரு கடனை தீர்க்க வேண்டும்


  • Also Read : ஊசி முனையில் தவம் செய்த ஆதிபராசக்தியின் கதை.!

    ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல், இளம் வயதிலேயே பெற்றோர்கள்/ அப்பா/ அம்மா இறந்து போனால், பூணூல் அணிந்தால் தான் கர்ம காரியங்களை செய்ய முடியும் என்பதால் உபநயனம் செய்யப்படுகிறது.



    கிரஹஸ்தர் பூணூல் – திருமணமானவர்கள் அணியும் பூணூல்

    கிரகம் என்பது வீடு, குடும்பம் என்பதைக் குறிக்கும். திருமணம் ஆனவுடன் ஒரு வீட்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு தலைவன் ஆவதைக் குறித்து, பிரம்மச்சாரி என்ற நிலையில் இருந்து கிரஹஸ்தர் ஆக மாறுவதைக் குறிக்கும். திருமண சடங்குகளில் ஒன்றாக, மூன்று இழைகள் உள்ள பூணூல், ஆறு இழைகள் கொண்ட கிரஹஸ்தர் பூணூலாக மாற்றப்படும்.

    Also Read : வரலட்சுமி பூஜை செய்வது எப்படி? அம்பாளை அழைப்பது முதல் நோன்பு கயிறு கட்டுவது வரை.!

    சஷ்டியப்த பூர்த்திபூணூல் – அறுவதாவது பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்

    சஷ்டியப்த பூர்த்திஎன்பது அறுவதாவது வயது நிறைவைக் குறைக்கிறது. ஒரு ஆணுக்கு 60 வயது முடிந்த பின்னர், 6 இழைகளாக இருந்த பூணூல், 9இழைகளாக அணிந்து கொள்ள வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Festival

அடுத்த செய்தி