கோவிந்தா கோவிந்தா ..." கோஷங்கள் முழங்க 400 ஆண்டுகள் பழமையான ஆவடி பருத்திப்பட்டு அக்ரஹாரம் ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத வேங்கட வரதப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், ஸ்ரீ வேங்கட வரதப்பெருமாள் பரமபத வாசலை கடந்தபோது, பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.." என தரிசனம் செய்தனர். திருமலையும், திருக்காஞ்சிபுரமும் ஒன்றிணைந்த பேரழகு இத்திருத்தலமாகும்!
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி பருத்திபட்டு அக்ரஹாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் பேரழகைச் சாதாரண வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. உற்று பார்த்தால் திருவேங்கடத்து இன்னமுதனின் திருமுகச்சாயலையும், திருக்காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமானின் திருமுக மண்டல அழகையும் ஒரே சமயத்தில் காட்சியளிப்பது தெரியும்.
ஆதலால் இருப்பெருமானின் திருக்கோலம் ஸ்ரீ வேங்கட வரதனாக ஒரு சேர கோலத்தில் காட்சியளிக்கும் கடவுள் இவர். மேலும், இவர் வேண்டிய வரங்களை கொடுக்கும் ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத வேங்கட வரதப்பெருமாள் ஆவார்.
இரு திவ்யதேசப் பெருமான்கள் ஒன்று சேர்ந்து பேரழகுப் பெருமானாக சேவை சாதித்தருளும் அற்புதத்தை இத்திருத்தலத்தில் மட்டும்தான் காண முடியும் என்கிறார்கள் பக்தர்கள்.
செய்தியாளார்: கண்ணியப்பன், அம்பத்தூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvallur, Vaikunda ekadasi