ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வரக்கூடாது : சபரிமலையில் புதிய கட்டுப்பாடு

பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வரக்கூடாது : சபரிமலையில் புதிய கட்டுப்பாடு

சபரிமலை பஸ்

சபரிமலை பஸ்

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பொது போக்குவரத்து மற்றும் வாடகை அல்லது சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பம்பைக்கு செல்லக்கூடாது என்றும் கேரள அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தநிலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனிடையே பக்தர்களின் பாதுகாப்பு கருதி கேரள அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி கேரள மோட்டார் வாகனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பொது போக்குவரத்து மற்றும் வாடகை அல்லது சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பம்பைக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை மண்டல காலத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள்... முழுவிவரம் இதோ!

தூக்கமின்மை மற்றும் சோர்வுடன் பக்தர்கள் பயணம் செய்வதால், முன்னெச்சரிக்கையாக இருசக்கர வாகனங்களில் பம்பைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala