இன்று முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்!

நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 1, 2019, 7:41 AM IST
இன்று முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்!
நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Web Desk | news18
Updated: August 1, 2019, 7:41 AM IST
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று முதல்  இள சந்தனம் பட்டாடை உடுத்தி பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பக்தர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுனர்.


நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்!


கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நின்ற திருக்கோலத்தில் அத்திவரதரை நிறுத்துவதற்கு உண்டான முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நேற்று மாலை 5 மணியுடன் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்கு உண்டான கால அவகாசம் நிறைவடைந்தது.

Loading...

மாலை 5 மணிக்குப் பிறகு, சரியாக 8:30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை அத்திவரதரை நின்ற திருக்கோலத்தில் நிறுத்துவதற்கு உண்டான பணிகள் இந்து அறநிலை துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் 3 மணியில் இருந்தே பக்தர்கள் நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பகுதிகளில் காத்திருந்தனர்.

இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

சயன திருக்கோலத்தில் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டவர்கள் மீண்டும் நின்ற திருக்கோலத்தில் காண வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதனால் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி என அனைத்துமே இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய காலி இடங்களில் 10,000 பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தற்காலிக கூடாரங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் போது பக்தர்களை கூடாரங்களில் தங்க வைக்கவும் பகுதி பகுதியாக பிரித்து அவர்களை அனுப்பி வைக்கவும்  உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

மேலும் அந்த கூடாரங்களை சுற்றி கழிவறைகளும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரம் அன்னதானமும் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவலர்களின் எண்ணிக்கை 5,000 இருந்து 7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களில் காஞ்சிபுரம் நகருக்குள் ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் வந்துள்ளன. அத்தி வரதரை தரிசிக்க கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...