அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்று தென்னிந்திய ஹிந்து மகா சபா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 16, 2019, 3:04 PM IST
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
அத்திவரதர்
Web Desk | news18
Updated: August 16, 2019, 3:04 PM IST
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் இன்று மாலையுடன் நிறைவுபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் எந்தவித ஆகம விதிகளும் இல்லாததால் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி தென் இந்திய ஹிந்து மகா சபா தலைவர் வசந்தகுமார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, கோவில் ஆகம விதி மற்றும் அதன் நடைமுறைப்படி அத்திவரதர் 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவது வழக்கம் என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.


மேலும் 48 நாட்கள்தான் வைக்க வேண்டும் என்பதற்கான கல்வெட்டு ஆதரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனையடுத்து கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது எனவும் கோவில் நிர்வாகமும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை இறக்கும் பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் படிக்க... காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை..

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...