அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன?, இந்த அதிசார குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தர இருக்கின்றார்?, என்னென்ன ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் அடிக்கப்போகிறது போன்ற ஆன்மிக தகவல்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....
அதிசார குருபெயர்ச்சி என்றால் என்ன?
பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்களை வழங்க இருக்கின்றார் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு
குரு அதிசார பெயர்ச்சியாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 2021 ஏப்ரல் 6ம் தேதி சென்றார். செப்டம்பர் 16ம் தேதி வரை குரு சுமார் 160 நாட்கள் (5 மாதம், 1 வாரம்) கும்பத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடந்தாண்டு வெறும் 92 நாட்கள் (3 மாதங்கள்) மட்டுமே அதிசார நிலைக்கு சென்ற குரு பகவான். இந்த முறை தன்னுடைய கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக 160 நாட்கள் வரை அதிசார நிலையாக குரு பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டம்
மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை
கெடு பலன்களை பெறும் ராசிக்காரர் யார்?
மேஷம்
கடகம்
கன்னி
விருச்சிகம்
மகரம்
அதிசார குரு பெயர்ச்சி விளைவுகள் என்ன?
சாதாரண நேரங்களைப் போல் இல்லாமல், தன் பயணத்தில் வேகம் எடுக்கும் குரு ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியைச் சற்று அதிகமாக வழங்குபவர். அசாதாரண பணிகளைச் செய்யும்போது புகழ் மற்றும் மரியாதையை அடைகிறார்கள்.
அதே சமயம் மீண்டும் அதிசார நிலையிலிருந்து வக்ர நிலையாக பழைய ராசியை அடையக்கூடிய காலத்தில் அந்த பலன்கள் எதிராக நடக்கும். இதன் காரணமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதாரணமாக செய்யக்கூடிய வேலையில் சரியாக யோசிக்க முடியாத நிலை ஏற்படும். எதிலும் சற்று கவனமாக செயல்பட வேண்டியதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Gurupeyarchi 2021