• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா!

வரதராஜ பெருமாள் கோவில்

வரதராஜ பெருமாள் கோவில்

கோவிலுக்கு செல்ல கொடுக்கப்படும் அனுமதி சீட்டுகளை இன்று முதல் ஜூலை 1-ம் தேதிக்குள் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு கார்களில் வரும் பக்தர்கள் அனுமதிச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வரதராஜப்பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா ஜூலை 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வெளியூர் பேருந்துகளுக்கு நகர்ப்பகுதியில் அனுமதி கிடையாது. உள்ளூரில் கார் வைத்திருப்பவர்கள் அனுமதிச்சீட்டு பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதிச்சீட்டு பெற்றனர்.

ஆதார், இன்சூரன்ஸ், ஆர்சி புக் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சான்றின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காருக்கான அனுமதி சீட்டை வழங்கி வருகிறார்கள்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த 48 நாட்களில் 30நாட்கள் அத்திவரதர் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார்.




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: