• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற, இவர்களை வழிபடுங்கள் ...

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற, இவர்களை வழிபடுங்கள் ...

அஷ்டதிக் பாலகர்கள்

அஷ்டதிக் பாலகர்கள்

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.

  • Share this:
    இந்தப் பூமியை எட்டு திசையில் இருந்தும் காவல் காக்க நியமிக்கப்பட்டவர்கள் தான் அஷ்டதிக் பாலகர்கள். இவர்களை வழிபட நிச்சயம் வாழ்க்கையில் வளம் சேரும். நலம் பெருகும். இன்னல்கள் நீங்கி சுகம் கிடைக்கும்.

    அஷ்டதிக் பாலகர்கள்

    அஷ்டதிக் பாலகர்களில் 'அஷ்டம்' என்றால் 'எட்டு', 'திக்' என்றால் 'திசை', 'பாலகர்கள்' என்றால் 'காப்பவர்கள்' என்பது பொருளாகும். இதன் பொருள் எட்டுத் திசை காவலர்கள் அல்லது எண்திசை நாயகர்கள் என்பதாகும். இந்த எட்டு பேர் தான் பூமியில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு சாட்சியாக இருக்கிறார்கள். ஆகாயத்தில் ஏற்படும் தீய விளைவுகள் பூமியை தாக்காதவாறு காக்கின்றனர்.

    அந்த வகையில், இந்திரன், அக்னி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய இவர்களைத் தான் நாம் அஷ்டதிக் பாலகர்கள் என்கிறோம். இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. இவர்களை பற்றி சற்று சுருக்கமாகக் காணலாம்.

    இந்திரன் : இவரே அஷ்ட திக் பாலகர்களின் தலைவர். இவர் கிழக்கை ஆள்பவர். வெள்ளையானை தான் இவரது வாகனம். வஜ்ரம் என்னும் ஆயுதத்தை இவர் தாங்கி இருப்பார். இவரை வேதங்கள் தேவர்களின் தலைவர் என்றும் சித்தரித்துக் கூறுகிறது. இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும் பெறலாம். அதாவது பூமியிலேயே சொர்க்கத்தைக் காணலாம். அப்படிப் பட்ட இந்த இந்திர பகவானின் தியான ஸ்லோகம்

    "ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ இந்திர ப்ரசோதயாத்."

    மேற்கண்ட இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும். தனுசு மற்றும் மீன ராசியை சேர்ந்தவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்ல நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

    அஷ்டதிக் பாலகர்களில், இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் அக்னி பகவான் ஆவார். இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. யாகத்தின் சமயத்தில் தீயில் போடப்படும் நிவேதனப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக புராணங்களில் ஒரு நம்பிக்கை உண்டு. இவருடைய துணைவியார் 'ஸ்வாஹா தேவி'. ஆட்டுகிடா வாகனத்தின் மீது அமர்பவர். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு, பலம், மன அமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

    இவருடைய தியான ஸ்லோகத்தை தினமும் கூறி வந்தால்... நெருப்பின் மூலமாக இழப்புகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாது. அத்துடன் ஒளி மிகுந்த அழகைப் பெறுவார்கள். இப்படிப் பட்ட அக்னி தேவனின் தியான சுலோகம்

    ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்

    அக்ஷமாலாம் கமண்டலும் I

    ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்

    ஸக்திஹஸ்தம் சகாஸநம் II

    அஷ்டதிக் பாலகர்களில், மூன்றாவது இடத்தைப் பிடிப்பவர் 'யமன்' ஆவார். வேதங்கள்... இவரை தெற்குத் திசையின் காவலர் என்றும்... இவரே எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என்றும் பல பெயர்களில் அழைக்கிறது. இவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை ஆவாள். இவளே பாரத தேசத்தில் நதியாகப் பாய்கிறாள் என்பது இன்னொரு கூடுதல் தகவல். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீங்கும். தரும சிந்தனைகள் தோன்றும். நோய்கள் அகன்று, ஆயுள் சித்திக்கும். இப்படிப் பட்ட இந்த யமனின் தியான ஸ்லோகம்

    அஷ்டதிக் பாலகர்கள்


    தண்டஹஸ்தம் பயாநகம் I

    காலபாஸதரம் க்ருஷ்ணம்

    த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் II

    மேலும் படிக்க...வெற்றி தரும் வெள்ளை பிள்ளையார்...

    அஷ்டதிக் பாலகர்களில், நான்காவது இடத்தைப் பிடிப்பவர் 'நிர்ருதி' ஆவார். எதிரிகள் பயம் நீங்க!.... வழக்குகள் சாதகம் ஆக!... கடன் தொல்லை அகல!... இவரை வணங்கினாலே போதும். இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும். இறந்த பிணத்தின் மீது அமர்ந்து இருப்பதாக ஸ்லோகங்கள் இவரைப் பற்றி வர்ணிக்கிறது. இவரது தியான ஸ்லோகத்த்தை கீழே பார்ப்போம்.

    ரக்தநேத்ரம் ஸவாரூடம்

    நீலோத்பல தளப்ரபம் I

    க்ருபாணபாணி மாஸ்ரௌகம்

    பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் II

    அஷ்டதிக் பாலகர்களில், ஐந்தாவது இடத்தைப் பிடிப்பவர் 'வருணன்' ஆவார். இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும். இவரை முறைப்படி வழிபட்டு வர... வீடுகளில் கூட தண்ணீர் பிரச்சனை படிப்படியாகக் குறையும். இவரது தியான சுலோகம் பின்வருமாறு...

    நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்

    ரக்தௌகத்யுதி விக்ரஹம் I

    ஸஸாங்க தவளம் த்யாயேத்

    வருணம் மகராஸநம் II

    அஷ்டதிக் பாலகர்களில், ஆறாவது இடத்தைப் பிடிப்பவர் 'வாயு தேவன்' ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்பது புராணங்களின் மூலமாக அறியப்படுகிறது. இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி ஏற்படும். அனுமானின் பரிபூரண அருள் கிடைக்கும். இவரது தியான ஸ்லோகத்தை கீழே காணலாம். இதனை முறைப்படி சொல்லி வர சகல விதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.

    ஆபீதம் ஹரிதச்சாயம்

    விலோலத்வஜ தாரிணம் I

    ப்ராணபூதம்ச பூதாநாம்

    ஹரிணஸ்தம் ஸமீரணம் II

    மேலும் படிக்க... திருச்சி மலைக்கோட்டையின் சிறப்புகள்...

    அஷ்டதிக் பாலகர்களில், ஏழாவது இடத்தைப் பிடிப்பவர் 'குபேரன்' ஆவார். இவரும், தேவி மகா லக்ஷ்மியும் செல்வத்தின் அதிபதிகளாகக் கருதப்படுகின்றனர். இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். அத்துடன் இவர் யக்ஷர்களின் தலைவர் ஆகிறார். ஈசனின் நண்பர் என்றும்... பரமேஸ்வரனிடம் இருந்தே அனைத்து செல்வங்களையும் பெற்றவர் என்றும் புராணங்கள் இவரை துதிக்கிறது. கலியுகத்தில் இவர் திருமாலுக்கே கடன் கொடுத்தவர் என்றும் கூட சொல்லப்படுகிறது. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவரின் ஆயுதம் கதை ஆகும். இவரை மனிதர்கள் சுமந்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இவருக்கு மனிதர்களே வாகனம். இவரது தியான சுலோகம் பின்வருமாறு...

    குபேரம் மநுஜாஸீநம்

    ஸகர்வம் கர்வவிக்ரஹம் I

    ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்

    உத்தராதிபதிம் ஸ்மரேத் II

    அஷ்டதிக் பாலகர்களில், எட்டாவது இடத்தைப் பிடிப்பவர் 'ஈசானன்' ஆவார். இவர் ஈசனின் ரூபம்... அதனாலேயே மங்கள ரூபம் எனப் போற்றப்படுகிறார். அதாவது, சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவரின் துணைவியார் ஈசானய ஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் சித்திக்கும். அதாவது உலக வாழ்வின் மெய்ப்பொருள் கிடைக்கப்பெறும். கீழ்கண்ட தியான ஸ்லோகத்தை சொல்லி இவரை வழிபடுவது மிகச் சிறப்பு. அந்த தியான சுலோகம்

    ஈஸாநம் வ்ருஷபாரூடம்

    த்ரிஸூலம் வ்யாலதாரிணம் I

    சரச்சந்த்ர ஸமாகாரம்

    த்ரிநேத்ரம் நீலகண்டகம் II

    வாழ்வில் ஜாதக தோஷங்கள் தீர்ந்து நலம் பெற இந்த அஷ்ட திக் பாலகர்களை வணங்கி பயன் அடையலாம்.

    மேலும் படிக்க... திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: