பைரவ வழிபாடு என்பது நம் பயத்தையெல்லாம் போக்கக்கூடியது. எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கக் கூடியது. இன்னல்களையெல்லாம் போக்கியருளுவார் பைரவர். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்து, நம் வாழ்வில் பக்கத்துணையாக இருப்பார் பைரவர். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கி அருளுவார். பைரவரில் எட்டு பைரவர்கள் உண்டு என்கிறது புராணம். எட்டு பைரவர்களையும் வணங்கித் தொழுதால், எல்லா வளங்களையும் நலன்களையும் தந்தருளுவார் பைரவர்.
எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். இன்று அந்தந்த பைரவர் பைரவிக்குரிய காயத்திரி மந்திரங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொளவோம் வாங்க....
அஷ்ட பைரவர்கள்
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்:
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான பிராம்ஹி விளங்குகிறாள்.
“ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.”
“ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்.”
ருரு பைரவர்:
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான மகேஸ்வரி விளங்குகிறாள்.
“ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.”
“ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்.”
சண்ட பைரவர்:
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள் செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான கௌமாரி விளங்குகிறாள்.
“ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”
“ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.”
குரோதன பைரவர்:
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி விளங்குகிறாள்.
“ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”
“ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.”

கால பைரவர்
மேலும் படிக்க... நன்மை தரும் கால பைரவ வழிபாடு...
உன்மத்த பைரவர்:
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள் செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான வராஹி விளங்குகிறாள்.
“ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.”
“ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்.”
கபால பைரவர்:
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணி விளங்குகிறாள்.
“ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.”
“ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்.”
பீக்ஷன பைரவர்:
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
“ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”
“ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்.”

கால பைரவர்
சம்ஹார பைரவர்:
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள் செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான சண்டிகை விளங்குகிறாள்.
“ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்”
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ சண்டி ப்ரசோதயாத்.”
மேலும் படிக்க... சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர்...
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
“ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.”
“ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”
“ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”
பைரவருக்கு உகந்த நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. கஷ்டமும் துக்கமுமான நிலையில், அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். பூஜிக்கலாம். வணங்கலாம். .
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். வடை மாலை சார்த்தியும் பிராத்தனை செய்யலாம்.
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்ட பைரவர்களையும் வணங்கினால் தீய சக்திகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் செய்து காத்தருளுவார் காலபைரவர் என்பது நம்பிக்கை...
மேலும் படிக்க... உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள்... உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.