முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது..

Arudra Darishanam | பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகமாக நடைபெற்றது.

Arudra Darishanam | பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகமாக நடைபெற்றது.

Arudra Darishanam | பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும்  வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மேலும் சிவபெருமான் சேந்தனார் வீட்டிற்கு கலி உன்ன சென்ற தினம் மார்கழி மாதம். திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் அந்த தினத்தையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இந்த ஆருத்ரா தரிசன நாளன்று சிதம்பரம் பகுதியில் உள்ள அனைவரது வீடுகளிலும் கலியை செய்து சிவபெருமானுக்கு படைப்பது வழக்கம்.  இத்தகைய சிறப்புமிக்க திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் கொடியேற்றி வைத்து, திருவிழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு வீதிகளை வலம் வந்தனர். அதன் பிறகு இரவு சுமார் 8 மணி அளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தத.

அப்பொழுது நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட ஐந்து  சுவாமிகளை தேரில் இருந்து  தீட்சிதர்கள் இறக்கி கோவில் உள்ளே உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு உள்ள ரகசிய அறையில் சுவாமிகளை வைத்து இன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரிக்கு  மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தற்போது நடராஜர், சிவகாமசுந்தரி  நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் நடராஜரை மனமுருகி வேண்டி, நமச்சிவாய நமசிவாய என கோஷமிட்டு வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரி சுவாமிகளை  தீட்சிதர்கள் கோவில் கருவரை கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கு வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா முடிவடைய உள்ளது.

மேலும் படிக்க... Arudra Darshanam | ஆருத்ரா தரிசனம் - காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொற்பொழிவு

இவ்விழாவில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்விழாவில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கப்படுகிறது. கடலூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க... ஆருத்ரா தரிசனம் 2021 | எல்லாம் சிவமயம் ...

நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வன்னம் போக்குவரத்து போலிசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர் . ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக 3 மணியிலிருந்து 4 மணிக்கு நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா இரண்டு மணி நேரம் தாமதமாக 6 மணியளவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!

First published:

Tags: Chidambaram, Sivan