உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் . ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவ பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம். திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
எனவே இந்த நாளன்று ஒவ்வொருவர் வீட்டிலும் களி செய்து சிவனுக்கு படைப்பது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவில் சன்னதிக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் நடராஜன் தீட்சிதர் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற உள்ளது.
அத்துடன் வருகின்ற ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்தகளில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். தொடர்ந்து ஆறாம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது.
அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படாததால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Cuddalore, Hindu Temple