ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருவாதிரை: திருமங்கலம் மீனாட்சி -  சொக்கநாதர் ஆலயத்தில் விமர்சையாக நடந்த ஆருத்ரா தரிசனம்...!

திருவாதிரை: திருமங்கலம் மீனாட்சி -  சொக்கநாதர் ஆலயத்தில் விமர்சையாக நடந்த ஆருத்ரா தரிசனம்...!

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

arudhra dharisanam | திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் - நடராஜர் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

திருவாதிரையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆருத்ர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி - சொக்கநாதர் ஆலயத்தில் இன்று ஆருத்ர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு உற்சவம் மூர்த்திகளான நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த அபிஷேகத்தில் பால், தயிர் சந்தனம், சீயக்காய், திராட்சை, தேன், நெய், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணிக்கவாசகரின் திருவெண்பாவை பாடல்களை பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் . கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Madurai