மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 6ஆம் தேதி (மார்கழி 22ம் தேதி) நடைபெறயுள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி புண்ணியம் பெற்றிடலாம் என்பது ஐதீகம்.
உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே உற்சவராகவும் இருப்பதால், இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கை கோயிலில் இந்த ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறும். அதிலும் பச்சை மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை எடுத்துவிட்டு அபிஷேக ஆராதனை நடைபெறும் நிகழ்சி சிறப்பு வாய்ந்தது. இந்த ஒரு நாளில் மட்டுமே இந்த மரகத நடராஜரை சந்தனக்காப்பு இல்லாமல் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.
திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா அபிஷேகம், தரிசன பெருவிழா ஜனவரி 1-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு ஆருத்ரா அபிஷேகம் நாளை ஜனவரி 5ஆம் தேதி (மார்கழி 21) அன்று நடைபெறயுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களிலும் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கலான திருவாலங்காடு, திருவண்ணாமலை, திருவையாறு, காஞ்சிபுரம், திருவானைக்காவல், காளஹஸ்தி, ஆகிய தலங்களிலும் பஞ்ச சபைகளிலும் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivan