திருப்பதியில் தற்போது திருப்பதியில் உள்ள இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்களில் இம்மாதம் 24-ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
சுமார் ஓராண்டிற்குப் பின் திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் கடந்த சில நாட்களாக செயல்பட துவங்கியுள்ளன. அவற்றின் மூலம் பக்தர்களுக்கு நாளொன்றிற்கு 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
Tirupati | திருப்பதியில் கட்டண சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை
இலவச தரிசன டிக்கெட்டுகளுக்காக பக்தர்கள் ஏராளமான அளவில் குவிந்ததால் இன்று காலை 11 மணிக்கு நாளை ஏழுமலையானை வழிபடுவது தேவையான டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன.
அதன் பின்னர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
அவையும் தீர்ந்து விட்ட நிலையில் தற்போது 24ஆம் தேதி ஏழுமலையானை வழிபடுவதற்காக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே இப்போது டிக்கெட் வாங்கும் பக்தர்கள் இன்னும் மூன்று நாட்கள் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டும்.
இதனை கவனித்து திருப்பதிக்கு வர இருக்கும் பக்தர்கள் தாங்கள் பயண திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.