'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சகஸ்ர நாமத்தை கொண்டு செய்யப்படும் அர்ச்சனைகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...
மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து இந்த சுலோகத்தைத் தினசரி 11 முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
சிம்ம ராசி:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
துலாம் ராசி:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.
தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
மகர ராசி:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
கும்ப ராசி:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.