Home /News /spiritual /

திருப்பதி செல்வோருக்கு தித்திப்பான செய்தி.. பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு

திருப்பதி செல்வோருக்கு தித்திப்பான செய்தி.. பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு

திருப்பதி

திருப்பதி

ஆந்திர மாநில அரசுப்போக்குவரத்து கழகம் பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளனர்.

    திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கருத்தில் கொள்ளப்பட்டது.

    திருமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்தும் விதமாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து  தேவஸ்தானம் தரப்பில் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில்  இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    இதனையடுத்து  பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் 1000 தரிசன டோக்கன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும்.

    Must Read : உலகை இந்தியா வழிநடத்த தேசிய கல்விக்கொள்கை உதவும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

    விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் சென்னை, வேலூரில் தினமும் 1000 டிக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Tamil News, Tirumala, Tirumala Tirupati, Tirupati Devotees

    அடுத்த செய்தி