ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

காசிக்கு இலவச ஆன்மிகப் பயணம்... இந்து அறநிலையத்துறையின் சூப்பர் அறிவிப்பு.

காசிக்கு இலவச ஆன்மிகப் பயணம்... இந்து அறநிலையத்துறையின் சூப்பர் அறிவிப்பு.

காசி ஆன்மிகப் பயணம்

காசி ஆன்மிகப் பயணம்

Kasi temple tour : 2022 - 2023 -ம் ஆண்டுக்கான காசி ஆன்மிகப் பயணத்திற்கு விண்ணப்பதார்கள் வரவேற்கப்படுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2022 - 2023 -ம் ஆண்டுக்கான காசி ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவர்கள் இந்து அறநிலையத்துறை மூலமாக பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயணத்திற்கு செல்ல எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  இந்த அறிவிப்பின் படி இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிவில் இருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோவிலுக்கு  ஆன்மிகப் பயணம் அழைத்து செல்ல இந்து சமய அறநிலைத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  விண்ணப்பிப்பது எப்படி:

  விண்ணப்பப் படிவங்களை தங்களது இருப்பிடம் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் இணைத்து விண்ணப்பம் பெற்ற அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

  விண்ணப்பத்தை கொடுக்க கடைசி நாள் : 15.12.2022.

  குறிப்பு :

  மண்டல இணை ஆணையர்கள் பரித்துரைக்கும் தகுதியுள்ள விண்ண்ப்பதார்கள் மட்டுமே ஆன்மிகப் பயணதிற்கு தேர்வு செய்யப்படுவர்.

  காசி ஆன்மிகப் பயணத்திற்கான நிபந்தனைகள்:

  காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

  விண்ணப்பதார்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.

  விண்ணப்பதார்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்.

  காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள் ) சென்று வர உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதற்கான மருத்துவ சான்று இணைக்கப்பட வேண்டும்.

  வீட்டின் ஆதாரம் இணைக்கப்படும் வேண்டும்.

  ஆதார் அட்டை நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  Also Read : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..! விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் தரிசனம்

  விண்ணப்பதாரின் கணவரோ / மனைவியோ விண்ணப்பித்திருந்தால் அதன் விவரத்தினை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

  பயணத்திற்குத் தேவையான அத்தியாவசிய மருந்து/ பொருட்களை தங்களுடன் எடுத்துவர வேண்டும்.

  தேரந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சொந்த செலவில் அவர்களது இடத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்தடைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை.

  மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தளத்தை காணவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Journey, Rameshwaram, Temple