புதுச்சேரியிலும் அத்திவரதர்: பக்தர்கள் தரிசனம்!

புதுச்சேரியிலும் அத்திவரதர்

ஆண்டுதோறும் புதுச்சேரியில் உள்ள அனந்த ரங்கநாதருக்கு இருமுறை தைலக்காப்பு செய்யப்படுவதாக அர்ச்சகர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சி அத்திவரதர் தரிசனம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, புதுவையிலும் அத்திமரத்தால் ஆன அனந்த ரங்கநாதர் சன்னதியில் பலரும் தரிசித்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனம், காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தில், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், புதுச்சேரியிலும் அதேபோன்று அத்தி மரத்தாலான அனந்த ரங்கநாதர் சன்னதி உள்ளது.

புனித தெரசா வீதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் மடத்தில், இந்த அனந்த ரங்கநாதர் சன்னதியானது அமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் பாம்பு படுக்கையில், அனந்த சயன கோலத்தில் எழுந்தருளிய வண்ணம் இந்த அத்திவரதர் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மட்டுமே அத்திமரத்தில் செய்யப்பட்ட அனந்த ரங்கநாதரை தரிசிக்கலாம். மாதந்தோறும் ரேவதி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடு இங்கு நடைபெறும்.

அத்துடன்ஆழ்வார் திவ்ய பிரபந்த சேவையும் சிறப்பாக நடைபெறும். சுக்கிர திசையில் பாதிப்பு உள்ளோர்களும்  திருமண தடையுள்ளோர்களும் வெள்ளியன்று நெய்தீபம் ஏற்றி பெருமாளை பிரார்த்தனை செய்து வந்தால் தகுந்த  பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் இந்த அனந்த ரங்கநாதருக்கு இருமுறை தைலக்காப்பு செய்யப்படுவதாக அர்ச்சகர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திரவரதர் திருவிழா!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: