• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • வாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷமும் அதற்கான பரிகாரமும்!

வாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷமும் அதற்கான பரிகாரமும்!

அன்னபூரணி

அன்னபூரணி

வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்ன பூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற வரை ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் வேலை செய்ய இயலாத வயோதிகர்கள் என இவர்களுக்கு மனப் பூர்வமாக அன்ன தானம் செய்யுங்கள். இதனால் அன்ன தோஷம் விடுபடும்.

  • Share this:
    சிலருக்கு கோடி, கோடியாய் நிறைய பணம் இருக்கும், ஆனால் உடலில் ஏகப்பட்ட வியாதிகள் குடி கொண்டு இருக்கும். திருப்பதிக்கே சென்றாலும் அவர்களால் நிம்மதியாக ஒரு லட்டு வாங்கித் சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கு மருத்துவர் சொல்லி விடுவார்... 'வேளைக்கு ஒரு கலசம் கஞ்சி தான்' என்று.

    இன்னும் சில கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். உணவு உண்ண உட்காரும் சமயத்தில் வீட்டில் சண்டை ஏற்படும். அதுவும் சாதாரண சண்டை அல்ல.... குடும்பிச் சண்டை. இதனால் உணவு உண்ணவே பிடிக்காது. இன்னும் பல பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் காசு இருக்கும். ஆனால், வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாது. இதனால் 'எதற்கு இந்த வாழ்க்கை?!' என்று வாடிப் போவார்கள். சில ராஜ யோக ஜாதகத்தில் கூட இந்த அன்ன தோஷம் ஏதேனும் ஒரு விதத்தில் காணப்படுகிறது.

    ஏழைகள் நிலையோ இன்னும் பரிதாபமாக இருக்கும். பசி இருக்கும் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடவும் ஆள் இருக்கும். உடல் ஆரோக்கியமும் இருக்கும். ஆனால் கையில் காசு இருக்காது. தான்ய விருத்தியே இருக்காது. வாழ்க்கை எப்போதுமே 'போத வில்லை' என்கிற நிலையைத் தான் தந்திருக்கும். அதிலும் ஒரு மிகப் பெரிய தரித்திர நிலையையே அவர்கள் அடைந்து இருப்பார்கள்.

    மேற்கண்ட இது போன்ற நிலையை தான் சாஸ்திரங்கள் 'அன்ன தோஷம்!' என்கின்றன. இது ஏழை - பணக்காரன் வித்யாசம் இல்லாத தோஷம். இந்த தோஷம் ஒருவருக்கு இருந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும்.



    அது சரி, ஏன் இந்த தோஷம் ஒருவரை பீடிக்கிறது? அதற்கான சில காரணங்களை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

    1. பசி என்று கேட்கும் பொழுது கேட்டவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்கள்.

    2. வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் பசியாக இருக்கும் சமயத்தில் தாங்கள் மட்டும் சாப்பிடுபவர்கள்.

    மேலும் படிக்க... ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

    3. பிறரை உண்ணக் கூட விடாமல் பசிக்கப் பசிக்க வேலை வாங்குபவர்கள்.

    4. உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பவர்கள்.

    5. கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள் அல்லது உணவை குப்பையில் அடிக்கடி கொட்டுவார்கள்.

    6. சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள்.

    என மேற்கண்ட அனைவரையுமே அன்ன தோஷம் கடுமையாகவே பாதிக்கும்.

    அன்ன தோஷத்திற்கான பரிகாரம் :

    வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்ன பூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற வரை ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் வேலை செய்ய இயலாத வயோதிகர்கள் என இவர்களுக்கு மனப் பூர்வமாக அன்ன தானம் செய்யுங்கள். இதனால், இத்தோஷத்தில் இருந்து சீக்கிரத்தில் விடுபட இயலும். குறிப்பாக சைவ உணவை அன்னதானமாக அளிப்பது அவசியம்.

    மேலும் படிக்க... விநாயகரின் அருளை பெற இந்த விரதங்களை கடைபிடியுங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: