நாமக்கலில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு அதிக பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி இந்தக் கோயிலில் நடக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், பக்தர்கள் கலந்துக் கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தரப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் கூறுகையில்,” நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் 2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இலவசம் அல்லது கட்டண வழியில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், அதற்கு பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியோடு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும் படிக்க... வெற்றிலை மாலை சாற்றுவோம்... ஆஞ்சநேயர் சிறப்பு பாடல்...
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல், ஆஞ்சநேயர் ஜெயந்தி நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால், நேராக வர இயலாதவர்கள் சமூகவலைதள நேரலை காணொலிகள் மூலம் கண்டுக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க... இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.