• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

Youtube Video

சனிக்கிழமை சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு விசேஷமான கிழமையாக இருந்து வருகிறது. சனிக்கிழமையில் இவர்களை வழிபடுபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 • Share this:
  அனுமனை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அனுமன், ஆஞ்சநேயர், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்கள் கொண்டிருந்தாலும் ராம பக்த அனுமன் என்று சொன்னால் அகம் குளிர்ந்து போவாராம் ஆஞ்சநேயர்.

  வைஷ்ணவக் கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், ஆஞ்சநேயருக்கு இந்தியா முழுவதிலும் தனிக்கோயில்களும் உள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயர், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர்,சுசீந்திரம் அனுமன், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் என பல தலங்களில் அனுமன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

  செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, சனிக்கிழமைகளில் அனுமனைத் தரிசிப்பதும் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல், ஹனும மந்திரத்தை ஜபித்தும் வழிபடுவது காரியத்தடைகளையெல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.

  ஹனுமன் மந்திரம் :

  ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே ராமதூதாய
  லங்காவித்வம் ஸனாய;
  அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
  ஸாகினி டாகினி வித்வப் ஸனாய
  கிலகிய பூபூ காரினே
  விபீஷணாய ஹனுமத் தேவாய
  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட் ஸ்வாஹா

  இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அவசியம் சொல்லுங்கள். அனுமனைத் தரிசித்து வேண்டுங்கள். காரியத்தை வீரியமாக்கித் தந்தருளுவார். எடுத்த காரியத்தையெல்லாம் நிறைவேற்றித் தந்திடுவார் ராம பக்த அனுமன்!

  இந்த மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லி வாருங்கள். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள் என்பது நம்பிக்கை. வாயும் மைந்தனாக, ஸ்ரீ ராமனின் சேவகனாக, சிவ பெருமானின் அவதாரமாக இருப்பவர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினால் அனைத்து தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

  மேலும் படிக்க... இன்று சர்வ ஏகாதசி விரதம்... பாவத்தை போக்கி நன்மை செய்யும் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி தெரியுமா?  அதிலும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் அனைத்து வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்த பஞ்ச முக வடிவை வணங்குவதாலும், பஞ்ச முக ஆஞ்சநேயருக்கான மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து ஆஞ்சநேயரை வணங்கி வந்தால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து உங்களை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

  மேலும் படிக்க... குரல் கேட்டு வருவாயோ பெருமாளே!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: