திருப்பதி ஏழுமலையானுக்கு துலாபாரம் காணிக்கை செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
கருடசேவை முன்னிட்டு ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு நேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை மீண்டும் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
முன்னதாக தன்னுடைய உடல் எடைக்கு சமமாக எழுபத்தி எட்டு கிலோ அரிசியை ஏழுமலையானுக்கு அவர் துலாபாரம் காணிக்கை செலுத்தினார்.பின்னர் ஏழுமலையானை அவர் வழிபட்டார். தொடர்ந்து தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஹிந்தி மற்றும் கனடா ஆகிய மொழி ஒளிபரப்புகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து தினமும் 6 லட்சம் லட்டுகள் தயார் செய்யும் வகையில் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனின் 12 கோடி ரூபாய் நன்கொடை செலவில் திருப்பதி மலையில் கட்டப்பட்டுள்ள பூந்தி தயாரிக்கும் மையத்தை அவர் திறந்து வைத்தார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.