Home /News /spiritual /

திருப்பாவையை தினமும் பாடினால் திருமணம் நிச்சயம்!

திருப்பாவையை தினமும் பாடினால் திருமணம் நிச்சயம்!

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.

    ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை மனமுருகி வேண்டிக் கொண்டு வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.

    ஜாதகத்தில் தோஷங்களோ, களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி சரியில்லாமல் இருந்தாலோ, கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலோ திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கலையே என்ற கவலை மனதை வாட்டும். எனவே திருமண தடை நீங்க மார்கழி மாதம் திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்தால் போதும் திருமண தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும்.

    பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    விரதம் இருக்கும் முறை

    சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மேலும் விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

    மேலும் படிக்க...  பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

    ஆண்டாள், பெருமாள் படம் வைத்து பூ தூவி காலையும், மாலையும் வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள்புரிவாள். திருமணத்தடைகளும் நீங்கும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Margazhi

    அடுத்த செய்தி