• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நாளை ஐப்பசி மாதப் பிறப்பு... முன்னோரை வணங்கினால் குலம் தழைக்கும்...

நாளை ஐப்பசி மாதப் பிறப்பு... முன்னோரை வணங்கினால் குலம் தழைக்கும்...

முன்னோர் வழிப்பாடு

முன்னோர் வழிப்பாடு

ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம்.

  • Share this:
    புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவுற்று, ஐப்பசி மாதம் நாளைய தினம் 18ம் தேதி திங்கள் அன்று பிறக்கிறது. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோருக்கான நாட்கள். நம் பித்ருக்களை நாம் வணங்குவதற்கான நாட்கள். அமாவாசையில் நம் முன்னோர்களை வணங்கினால், அவர்களின் ஆசியைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    அதேபோல், ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. இந்த 96 தர்ப்பணங்களையும் தவறாமல் செய்பவர்கள் இல்லத்தில் சந்ததிக் குறைபாடு இருக்காது. சந்தோஷத்துக்குப் பஞ்சமிருக்காது. உரிய வயதில் மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பதும் நம்பிக்கை.

    அதுமட்டுமல்லாமல் முன்னோர் வழிபாட்டை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் செய்ய வேண்டும். அந்தநாளில், முன்னோருக்கான தர்ப்பணங்களைச் செய்தால் நல்லது. முக்கியமாக மாதப்பிறப்பின் போது முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரத்தின் பெயரையும் சொல்லி மூன்று முறை எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

    தயிர் சாதம்


    கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம் என்றோ விஷ்ணு கோத்திரம் என்றோ பொதுவாகச் சொல்லியும் தர்ப்பணம் செய்யலாம். பின்னர், முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து வழிபடலாம். மேலும் முன்னோருக்குப் படைத்த உணவை, காகத்துக்கு வழங்கி வணங்குதல் கூடுதல் சிறப்பு.  காகம் என்பது முன்னோராகவும் சனீஸ்வரரின் வாகனமாகவும் பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க... பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

    எனவே காகத்துக்கு உணவிடுவோம். இதை எதையுமே செய்ய முடியாதவர்கள் இரண்டு பேருக்காவது, நம் முன்னோர்களை நினைத்து, தயிர்சாதம் வழங்கலாம். இந்த அன்னதானத்தால், வீட்டில் இருந்த பணப்பிரச்சினைகள் அகலும். சுபக்காரியங்கள் நடக்கும். கடன் தொல்லைகள் தீரும். தனம் மற்றும் தானியம் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் கடந்து ஓடிப்போகும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம் தேக பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது... பக்தர்களுக்கு அனுமதியில்லை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: