Home /News /spiritual /

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தேர்... ஆயிரம் ஆண்டுக்கு பிறகு வெள்ளோட்டம்

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தேர்... ஆயிரம் ஆண்டுக்கு பிறகு வெள்ளோட்டம்

Anbil sundraraja Perumal temple therottam | திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயில் தேர், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

Anbil sundraraja Perumal temple therottam | திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயில் தேர், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

Anbil sundraraja Perumal temple therottam | திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயில் தேர், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தை, சோழச் சக்ரவர்த்தி சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர் அநிருத்தராய பிரம்மராயர். அவரது சொந்த ஊர், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமம். அவரது காலத்தில், இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில், பெரும் சிறப்புப் பெற்று விளங்கி இருக்கிறது.

ஆண்டுதோறும், வைகாசி விசாகம் அன்று, இக்கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளை கடந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக திருத்தேர் நிறுத்தப்பட்டு, தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்தும் போய்விட்டது.

இதைக்கண்டு மனம் வாடிய அன்பில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, 45 லட்ச ரூபாய் செலவில் அத்தி மரத்தில் அழகிய தேர் ஒன்றை உருவாக்கினர். அதை பாதுகாப்பாக, 'ஃபைபர்' கண்ணாடி கொண்ட தேர் நிலையில் நிறுத்தினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உபகோவிலாக, அக்கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் உள்ளது.
கடந்த, 2 ஆண்டுகளாக தேர் நிலையிலேயே நின்ற நிலையில், தேரோட்டத்திற்கான அனுமதியை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் வழங்கியது. தேரோடும் வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவங்கி வைத்தனர்.

தேர் திருவிழா

மங்கள மேள, தாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க, வாண வேடிக்கைகளுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது. தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து, வரும் ஜூன் 4ஆம் தேதி, வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் இங்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், பணியாளர்களுடன் இணைந்து, அன்பில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.



Also see... சுவாரஸ்ங்கள் நிறைந்த இந்த சூரியன் கோவில் பற்றி தெரியுமா?

அன்பில் அமைச்சர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழ சக்ரவர்த்தி சுந்தர சோழரிடம், அன்பில் கிராமத்தில் பிறந்து அமைச்சராக இருந்தவர் அநிருத்திராய பிரம்மராயர்.  அதன்பிறகு, திமுகவின் ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் அன்பிலார் என்று அழைக்கப்படும் அன்பில் தர்மலிங்கம். தற்போதும் ஒருவர் தமிழகத்தின் அமைச்சராக இருக்கிறார்.. அவர், அன்பிலாரின் பேரன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மற்றொருவரும் அமைச்சராக இருக்கிறார். அவர், அன்பில் கிராமத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள காணக்கிளிய நல்லூரை சேர்ந்த திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Trichy

அடுத்த செய்தி