Home /News /spiritual /

Sadhguru Tamil : ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய சொல்லப்படாத ஒரு கதை!

Sadhguru Tamil : ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய சொல்லப்படாத ஒரு கதை!

சத்குரு

சத்குரு

Sadhguru Tamil : ஞானம் அடைவது அற்புதமான அனுபவத்தை தரும் என்றால், ஏன் ஞானிகள் தங்கள் உடலை விட்டு செல்வதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மகான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி விளக்குகிறார் சத்குரு.

மேலும் படிக்கவும் ...
  ராமகிருஷ்ணர் பரமஹம்சர் பத்தி கேள்வி பட்டுருக்கீங்களா? அவர் வாழ்ந்த காலத்துலயே மக்கள் அவரை தெய்வமாக வழிபட்டாங்க. தன் சீடர்கள் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு. உள்ள போய் தன் மனைவி கிட்ட இன்னைக்கு என்ன சாப்பாடுனு கேப்பாரு. அவங்க மனைவி சாரதா தேவிக்கு இது பெரிய அவமானமா இருக்கும். அலறதுல பிரோயோஜனம் இல்லை. நேரம் வந்துருச்சுனு அவரு சொன்னாரு.

  கேள்வி : தன்னை உணர்தல் அப்டீன்றது ரொம்ப அழகான அற்புதமான அனுபவம்னா , ஞானம் அடைந்தவர்கள் ஏன் அவங்களோட உடலை விட்டு போகணும்னு முடிவு எடுக்குறாங்க?

  நான் இப்ப என்ன சொல்றானோ அத நீங்க சரியாக புரிஞ்சுக்கணும். ஏன்னா ரொம்ப சுலபத்துல இதனை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு. ஞானோதயம்னா என்ன? 60களில் நீங்க கலிபோர்னியா போனீங்கனா இப்டி விளம்பரம் இருக்கும். நீங்க இந்தியாவுக்கு போனீங்கனா 12 வருஷம் எடுக்கும். 25 டாலர் போதும் 1 மணி நேரத்துல ஞானோதயம் இங்கேயே நடக்கும்னு விளம்பரம் இருக்கும். நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஹெட் போன் போட்டுக்கணும். நல்ல ஃபேன்சியா தெரியுற மாதிரி கண்ணாடி போட்டுக்கணும். அவங்களும் உங்களுக்குள்ள ஒன்னு போடுவாங்க. ஒளி , ஒலி எல்லாம் சேர்ந்து ஒரு மாய அனுபவத்தை அது உங்களுக்கு ஏற்படுத்தும். அப்படித்தான் விளம்பர படுத்தினாங்க. அதனால ஞானோதயம்னா என்ன? நான் தொடர்ந்து அசதோ மா சத்கமய , அசதோ மா சத்கமயனு சொல்லிட்டே இருக்கிறேன். அதாவது பொய்மை நிலையில் இருந்து மெய்மை நிலைக்கு உங்களை விழித்தெழ செய்யணும்னு நான் நினைக்கிறேன்.

  இதனை ரொம்ப எழுமையாக சொல்லணும்னா உங்களை பற்றிய அடிப்படையான உண்மை என்னென்னா? இப்ப எது நீங்க இல்லையோ அதனை நான்னு நீங்க உணர்ரீங்க. இது பொய் இல்லையா?

  இந்த சோபாவை நான்னு நான் உணர்ந்தேன்னா நிச்சமாக எனக்கு நான் தேவை படும் இல்லையா? ஆமாவா இல்லையா? நீங்க இந்த பாத்திரம் , பொருள் தான் நான்னு நினைசீங்கனா நிச்சயமாக உங்களுக்கு ஏதோ ஆயிருக்குனு அர்த்தம். இந்த உடம்பும், இந்த பாத்திரமும் இந்த பூமியில இருந்து எடுத்தது தான். இதுவும் பூமியோட ஒரு துண்டு தான். இது தான் நான்னு நீங்க நினைக்கும் போது ஏன் அந்த பாத்திரம் நான்னு நீங்க நினைக்க கூடாது.

  இதையும் படியுங்கள்: திருமணமான தம்பதிகள் ருத்ராட்சம் அணியலாமா? சத்குரு பதில்

  இன்னொரு பொருளை நான் என கூறுவது நிச்சயமாக பைத்தியக்காரத் தனம் தானே? நம்ம நாடு ஜனநாயக நாடு தான்னு எனக்குத் தெரியும். பெரும்பான்மை தான் ஜெயிக்கும்னு எனக்குத் தெரியும். பெரும்பான்மையானவர்கள் சொல்றது தான் உண்மையாகும். ஆனால் பிரபஞ்சத்தின் அடிப்படையில் அது செயல்படுறது இல்லை. எது இருக்குதோ அது இருக்குது. எது இல்லையோ அது இல்லை. இதோடு நீங்க ஒத்து இருந்தீங்கனா அது ஒரு விதமாக வேலை செய்யும். ஒத்து இல்லை என்றால் அது இன்னொரு விதமாக வேலை செய்யும் அவ்வளவு தான்.

  இத நான் இல்லைனு நீங்க அறிவு பூர்வமாக இல்லை , அனுபவ பூர்வமாக புரிஞ்சுக்கிட்டிங்கனா இப்ப இந்த உடம்பை தள்ளி வச்சுட்டு நடக்குறது இயல்பானதாக இருக்கும். இல்லையா? நீங்க அதுக்கு கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி மரணம்னு பெயர் வைக்கிறீங்க. இல்லை. நான் இந்த பாத்திரம்னு நினச்சுகிட்டேன். அதனால இத நான் சுமந்து கிட்டே அலையுறேன். ஒரு நாள் நான் இது இல்லைனு புரியுது. அப்ப அதனை கீழ வச்சுட்டு உட்காருறது இயல்பு தானே. இல்லையா? அப்படித் தானே அதத் தான் அவங்க செஞ்சாங்க. நீங்க அதனை மிகைப் படுத்துறீங்க. ஞானம் அடைந்தவர்கள் உடல் விட்டு போயிடுறாங்கனு நீங்க இதனை மிகை படுத்துறீங்க. அவங்க இதத் தள்ளி வச்சுட்டு போயிறாங்க.

  அவங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்திருந்தா வச்சுருந்திருப்பாங்க. வேற வேலை இல்லை என்பதால அத இங்கயே விட்டுட்டு போயிறாங்க. இது வாழுறதுக்கு புத்திசாலித் தனமான வழியா இல்லையா. இந்த பாத்திரத்தை வச்சு இதுக்கு வேலை இருந்துச்சுனா இதனை சுமந்துட்டு இருக்கலாம். இல்லைனா விட்டுட்டு போகலாம். ஒருத்தருக்கு ஞானோதயம் நடக்கும் போது 99% அவங்க ஞானோதயம் அடையுற நேரமும் , உடல் விடுற நேரமும் ஒரே சமயத்துல நடக்குது. உடம்போட இயக்கத்தை நீங்க புரிஞ்சுக்காத வரையிலும் உங்களால உடம்பை பிடிச்சு வச்சுக்க முடியாது. பக்திமார்கத்துல உள்ளவங்க அனேகமாக சின்ன வயசுல இறக்குறதை நீங்க பாத்துருக்க முடியும். அது இறப்பு இல்லை. அவங்க தன்னை உணர்ந்த அந்த கனத்துலயே உடம்பை கழட்டி விட்டுட்டு போயிராங்க.

  இதையும் படியுங்கள்: இறந்தவங்களுக்கு காரியம் செஞ்சா எனக்கு என்ன பலன்?

  வரலாற்றுல பாத்தீங்கன்னா தன்னை உணர்ந்த யோகிகள் எப்பவுமே 28-36 வயசுக்குல உடலை விட்டுட்டு போய்டுறாங்க. இதனை கவனிச்சு இருக்கீங்களா. இந்தியாவுல இத மாதிரி நிறைய மனிதர்கள் நிரம்பி இருக்குறாங்க. அந்த வயசுல அவங்க உடல் விட்டு போய்டுவாங்க. ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? விவேகானந்தர் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? அமெரிக்காவிற்கு போன முதல் யோகி இவரு தான். 1893ல போனாரு. அவரோட குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்.  அவர் ஒரு பக்தர். அவர் தாய் தெய்வ வழிபாட்டில் முழு பக்தியாக இருந்தாரு. முற்றிலும் நீங்க நினச்சு கூட பார்க்க முடியாத ஒரு விதத்துல அவர் அப்படி இருந்தாரு. அவர் வாழ்ந்த காலத்துலயே மக்கள் அவரை தெய்வமாக வழி பட்டாங்க. அவரை சிலுவையில் அறையில அவரை வணங்குனாங்க. ஏன்னா? அவரோட இறப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஆனா அவரு உணவு மேல அப்டி ஆர்வமாக இருந்தாரு. தன் சீடர்கள் மத்தியில பேசிகிட்டு இருப்பாரு உள்ள போய் தன் மனைவி கிட்ட இன்னைக்கு என்ன சாப்பாடுனு கேப்பாரு. அவங்க மனைவி சாரதா தேவிக்கு இது பெரிய அவமானமா இருக்கும். அலறதுல பிரோயோஜனம் இல்லை. நேரம் வந்துருச்சுனு அவரு சொன்னாரு.  உங்களுக்கு என்ன பிரச்சனை ? நானே பெருசா உணவு பத்தி யோசிக்கிறது இல்லை. நாங்க உங்களை கடவுளாக பாக்குறோம். இது என்ன உணவு பத்தி உங்களுக்கு இவ்வளவு ஆர்வம்னு கேட்டாங்க? அதுக்கு அவர் அதெல்லாம் பரவா இல்லை. இன்னைக்கு என்ன சாப்பாடுனு கேப்பாரு.

  இப்டியே போச்சு ஒரு நாள் சாரதா தேவி சாப்பாடு மேல ஏன் இப்படி பைத்தியமாக இருக்கீங்கனு கேட்டாங்க. உங்களுக்கே தெரிஞ்சுருக்கும். இந்தியாவுல பெரிய தட்டுல தான் சாப்டுவாங்க. அதன் பெயர் தாலினு சொல்வாங்க. அன்னைக்கு அவரு சொன்னாரு. என்று நீ எனதருகில் சாப்பாடு தாலியை கொண்டு வரும் போது நான் சாப்பாட்டின் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கின்றேனோ அன்றைய தினத்தில் இருந்து 3 நாள்ல இறந்து போயிருவேன்னு அர்த்தம்னு சொன்னாரு. அவரு சொல்லி 7 வருஷம் ஆச்சு. அவருக்கு ஊஞ்சல்ல உட்கார்ந்து சாப்பிடுற பழக்கம் உண்டு.  அவரு ஊஞ்சலில் உட்கார்ந்து சாப்பிடுவார். சாரதா தேவி சாப்பாடு கொண்டு வந்தாங்க. ராமகிருஷ்ணர் மூஞ்ச திருப்பிக்கிட்டாரு. சாரதா தேவி அழ ஆரம்பிச்சாங்க. இன்னும் 3 நாள் தான் இருக்குனு அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. அலறதுல பிரோயோஜனம் இல்லை. நேரம் வந்துருச்சுனு அவரு சொன்னாரு. 3 நாளில் அவரு உடல் விட்டு போனாரு. உணவு மேல இருக்குற ஆசையை உயிரோட இருக்குறதுக்கான கருவியாக அவரு பயன்படுத்திக்கிட்டாரு.

  அந்த ஆசையை அவரு ஏற்படுத்திகொள்ளவில்லை எனில் அவரு போய்டுவாரு. அதனால அவரு தினம் தினம் அவர் தனக்கு சாப்பாடு சாப்பாடுனு சொல்லிகிட்டே இருந்தாரு. அது அவரோட இயல்பு கிடையாது. ஆனா அந்த ஆசையை அவரு உருவாக்கி கிட்டாரு. உடலோடு இருக்குறதுக்காக. உணவு பத்தியே யோசிச்சு சாப்பாடு மேல ஒரு ஆசையை உருவாக்கினார். அதன் மூலமாக உடம்போட ஒட்டி இருந்தாரு. ஒன்னு நீங்க இந்த மாதிரி ஒரு ஆசையை உருவாக்கனும். இல்லைனா வேற சில விதைகளும் இருக்கு. உடலோடு இயக்கத்தை பத்தி நீங்க புரிஞ்சுக்கணும். உடலோடு இயக்கத்தை பத்தி புரிஞ்சுக்கணும்னா அதுக்கு குறிப்பிட்ட விதமான ஈடுபாடு தேவை அது சும்மா வந்துறாது. தன்னை உணர்தல் ஒரு கனத்துல நடந்துறலாம். ஆனா உடல் இயக்கத்தை பற்றிய புரிதல் அது ஒரு கனத்துல நடக்காது. அதுக்கு ஜென்ம ஜென்ம செயல் செஞ்சுருக்கணும்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Sadhguru

  அடுத்த செய்தி