ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!

திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!

அம்மன்

அம்மன்

Amman Temple | ஆடி மாதம் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்களின் வரிசையில், பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் அம்மன் கோவில்களின் பட்டியால் இங்கே.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

அம்மன் என்றாலே வரம் தருபவர் தான். நாடெங்கிலும் பல கோயில்கள் தனிச்சிறப்பு வாய்ந்துள்ளது. எந்த தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து வேண்டுதலை முன்வைத்தாலும் அது கட்டாயமாக நிறைவேறும். அந்த வகையில், ஆடி மாதம் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்களின் வரிசையில், பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் அம்மன் கோவில்களின் பட்டியால் இங்கே.

திருமண தடை நீக்கும் தில்லைவிடங்கன் தில்லைநாயகி ஆலயம்

சீர்காழியின் அருகே உள்ள, திருத்தலம் என்ற ஊரில் இருக்கும் தில்லைவிடங்கன் தில்லைநாயகி, திருமணத் தடை நீக்கும், தாலி வரம் தரும் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகவும் பழமையான ஊர்களில் திருத்தலமும் ஒன்று. இந்த ஊரில் உள்ள கோயிலில், சிவபெருமானும், பார்வதிதேவியும், விடங்கேச்வரன் மற்றும் தில்லைனாயகியாக அருள்புரிகிரார்கள். தில்லைநாயகி மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்றும், திருமண தோஷங்கள் நீக்கி, தடைகள் வலிக்கி, திருமண வரமும், சுப நிகழ்சிகளும் நடத்தும் வரத்தைத் தருகின்றாள் என்றும் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த பிறகு, தம்பதி சமேதராக வந்து, அம்மனை வழிபட்டு, தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

ராகு கேது தோஷம் நீங்க, கல்யாணி கதம்ப வனவாசி அம்மன் தரிசனம்

சிதம்பரத்தில் உள்ள வீரபத்ரசாமி கோவிலில் கல்யாணி கதம்ப வனவாசி அம்மன் வீற்றிருக்கிறார். ராகு கேது தோஷம் என்றாலே நவக்கிரகங்களில் கும்பகோணத்தில் இருக்கும் நவக்கிரக ராகு, கேது ஆலயங்களுக்கு சென்று, பூஜையில் கலந்து கொண்டால் தோஷம் நீங்கும் என்று கூறுவார்கள். அதேபோல ராகு கேது தோஷம் நீங்குவதற்கு காளாஸ்திரி சென்று பூஜை செய்பவர்களும் உண்டு. இந்த இரண்டு கோவில்களும் தவிர்த்து வீரபத்திர சாமி ஆலயத்தில் உள்ள கல்யாணி கதம்ப வனவாஸி அம்மனை தரிசித்து பூஜை செய்து வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது ராகு கேது தோஷம் இருப்பவர்கள் பூஜையில் கலந்து கொண்டு, மஞ்சள் நிற புடவை, மாலை சாற்றி வழிபாடுவார்கள். இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆடி அமாவாசைக்கும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது.

Veerapandi temple 

உணவுப்பஞ்சம் நீக்கும் வண்டிமறிச்சி அம்மன்

உள்ள வண்டி மறிச்சி அம்மன் பற்றி பல கதைகள் இன்று வரை அற்புதங்களாக கூறப்பட்டு வருகிறது. ஊர்க்காரர்கள் வண்டி கட்டிக்கொண்டு செல்லும்பொழுது ஒரு குழந்தை திடீரென்று அவர்கள் முன் தோன்றி திடீரென்று மாயமாக மறைந்துள்ளது. அந்த இடத்தில் அம்மன் தான் குழந்தையாக காட்சி தந்திருக்கிறார் என்றும், குழந்தையாக காட்சி தந்து மறைந்த அந்த இடத்தில் பலவித அற்புதமான நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் கூறி வருகிறார்கள். அம்மனை வழிபட வேண்டி, அந்த இடத்தில் பல விழாக்கள் நடைபெறுகிறது. ஆடி மாதம், ஆடி அமாவாசை மற்றும் நவராத்திரி ஆகிய தருணங்களில் அன்னதான விழா நடைபெறும். மலை மலையாக சாதம் வடித்து அனைவருக்கும் அன்னதானம் செய்யப்படும். இங்கு அன்னதானம் செய்பவர்கள், கலந்து கொள்பவர்கள் வீட்டில் உணவுப்பஞ்சமும் வறுமையும் ஏற்படாது என்பது ஐதீகம்.

Also Read : அம்மாயி கொழுக்கட்டையும் அவ்வை நோன்பும் – ஆடி செவ்வாய் வழிபாடின் மகிமை!

குழந்தை வரம் அருளும் குமரி அம்மன்

கன்னியாகுமரி, குமரி அம்மனைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. விலங்குகளை பலியிட்டு அந்த ரத்தத்தில் அபிஷேகம் செய்து வந்தது நிறுத்தப்பட்டது. பின்னர், சிறுமியாக காட்சியளிக்கும் குமரி அம்மனுக்கு, மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை நீரில் கலந்து, சிவப்பு நிற திரவமாக அபிஷேகம் மற்றும் பூஜை நடத்துகின்றனர். அம்மனுக்கு கன்யா பூஜை செய்து வழிபட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

Also Read : ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

தடைகள், தொலைந்த பொருட்கள் மீட்க, பாவம் நீங்க சீவலப்பேரி துர்க்கை அம்மன்

சீவலப்பேரியில் துர்க்கையம்மன், சிவன், விஷ்ணு மற்றும் தம்பதியாக சனி பகவன் மற்றும் நீலாதேவியுடன் வீற்றிருக்கிறார். தாமிரபரணியில் விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், பாவம் தொலைக்க தாமிரபரணியில் மூழ்கியது என்று புராணங்களில் கூறப்படுகிறது. துர்க்கையம்மன் தரிசனம் எல்லா விதமான தடைகளை நீக்குகிறது என்றும் பாவங்களை தீர்க்கிறது என்றும் கூறப்படுகிறது. அஷ்டமி என்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

கடன்கள் நீக்கும் வாராஹி அம்மன்

வாராஹி அம்மன் வழிபாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. எதிரிகள் தொல்லை, பாதுகாப்பு, வழக்கு சிக்கல் நீங்க வென்று பலவிதமான வேண்டுதர்களுக்கு வாராஹி அம்மனை வழிபடுவது வழக்கம். ஆனால், கடன்கள் தீரவும், சொத்து, வீடு, செல்வம் இழந்து தவிப்பவர்களுக்கும் வாராஹி அம்மனை வழிபட்டால், இழந்த அனைத்தும் மீண்டும் கிடைக்கும். புதன் கிழமைகளில் வாராஹி அம்மனை பூஜித்து வழிபட்டு வர, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்கும்.

Also Read : ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆன்மீக அறிவியலும்.!

வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்

மிகவும் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். மற்ற ஆலயங்களைப் போல கருவறையில் இல்லாமல், வெட்டவெளியில் காட்சியளிக்கிறார் வெக்காளியம்மன். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சீட்டுகளில் எழுதி சூலத்தில் கட்டிச் செல்வார்கள். கடன், குடும்பத்தில் பிரச்சனை, நோய், குழந்தைப் பேறு, நஷ்டம், தடை என்று பக்தர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, வேண்டும் வரம் தருகிறார் வெக்காளியம்மன்.

Also Read : ஆடி மாத முதல் நாள் - வீட்டிலேயே அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

கிரக தோஷங்கள் நீக்கும் மாங்காடு காமாட்சி அம்மன்

மாங்காடு காமாட்சி அம்மனை வரம் தரும் அம்மன் என்றே அனைவரும் கூறி வருகிறார்கள். பலருக்கும், மாங்காடு காமாட்சி அம்மன் இஷ்ட தெய்வமாக உள்ளது. வேண்டிய வரங்கள் தரவும், விருப்பங்கள் நிறைவேறவும் மாங்காடு காமாட்சி அம்மனுக்கு பலரும் புடவை மற்றும் எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடுவார்கள். கிரக தோஷத்தால் ஏற்படும் தடைகள் இதனால் நீங்கும் என்று கூறப்படுகிறது.

தீராத பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன்

மகிஷாசுரனை வதம் செய்வதற்காக மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்தார் பராசக்தி. திருத்தணியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் மார்க்கத்தில், பொன்பாடி அருகே உள்ளது இந்த கோயில். எவராலும் வெல்ல முடியாது என்ற கொடிய அரக்கனை கொன்ற அம்மனை, வணங்கி பூஜை செய்து வழிபட்டு வந்தால், தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். குறிப்பாக, எதிரிகள் காணாமல் போவார்கள், சொத்து இழுபறி, தொழில் முடக்கம் என்று நாட்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், அம்மன் வேண்டுதல் நிறைவேற்றும். விதவிதமான வண்ணங்களில் துணிகளை கட்டி பக்தர்கள் வேண்டுதல் செய்கிறார்கள்.

Also Read : சந்திரன் ஆளுமை கொண்ட 11ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

குலதெய்வம் மற்றும் ஊர் தெய்வத்திடம் பிரார்த்தனை

அவரவர் குலதெய்வ வேண்டுதலும், பிரார்த்தனையும் எப்போதும் நிறைவேறாமல் போகாது. உங்கள் குலதெய்வம் அம்மனாக இருந்தால், நீங்கள் மனதார அவரிடம் தான் முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும். அம்மன் அல்லாத வேறு சாமி உங்கள் குலதெய்வமாக இருந்தால், உங்கள் ஊரில் இருக்கும் அம்மனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

First published:

Tags: Aadi