• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்று ஆவணி அமாவாசை: விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

இன்று ஆவணி அமாவாசை: விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

அமாவாசை

அமாவாசை

ஆவணி அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றியும் தெரிந்துக் கொள்வோம் வாங்க...

  • Share this:
    நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறிந்தும் தெரிந்துக் கொள்ளலாம்.  அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். பித்ரு லோகத்தில் இருந்து ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் அமாவாசையின் போது பூமிக்கு வருகிறார்கள். இந்தநாளில், முன்னோரை வழிபடவேண்டும். அவர்களின் அருளையும் ஆசியையும் பெறவேண்டும்.

    நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. ஆவணி அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    ஆவணி மாத அமாவாசை தினமான இன்று காலையிலேயே குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    மேலும் படிக்க... ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...

    மேலும் இந்த இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

    மேலும் படிக்க... மேலும் படிக்க... பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக திட உணவு கொடுக்க போகிறீர்களா? அதற்கான நல்ல நாள், நேரம் குறித்த விவரங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: