ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

உங்க பெயர் B ல ஸ்டார்ட் ஆகுதா? இதான் நீங்க.. நெத்தியில அடித்து சொல்லும் முதல் எழுத்து..

உங்க பெயர் B ல ஸ்டார்ட் ஆகுதா? இதான் நீங்க.. நெத்தியில அடித்து சொல்லும் முதல் எழுத்து..

B முதல் எழுத்து

B முதல் எழுத்து

Alphabet B - Characteristics | சில நேரங்களில் இவர்களுடைய பலமே பலவீனமாகவும், பலவீனம் பலமாகவும் மாறி விடுகிறது. அன்பாக இருந்தாலும் சரி, பகைமை உணர்வாக இருந்தாலும் சரி, இவர்கள் அதீதமாக அதை வெளிப்படுத்துவார்கள். சுய கௌரவம் மிகவும் முக்கியம் .

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.B என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

B என்ற எழுத்து முடிவிலி போன்ற வடிவில் இருக்கிறது

ஆங்கில எழுத்துக்களில் B என்பது இரண்டாம் எழுத்து ஆகும். எனவே முதல் போட்டியில் வெற்றி கோட்டின் அருகில் அடுத்ததாக இந்த எழுத்து உள்ளது. வெற்றிக்கு அருகில் இருந்தாலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இல்லை என்பதே இவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமையும், இது ஆசையை உருவாக்கும், இதனாலேயே இவர்கள் மிக மிக சென்சிட்டிவ்வான நபர்களாக அறியப்படுவார்கள்.

B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தோடு செயல்படுவார்கள். எந்த விஷயத்தை செய்தாலுமே அது லட்சியத்தை அடைவதற்கு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு என்று அதைச் சார்ந்து தான் அமையும்.

B, சமநிலை மற்றும் முடிவிலி ஆகிய இரண்டையுமே குறிக்கிறது. மனிதர்களால் எப்பொழுதுமே இன்ஃபினிட்டி எனப்படும் முடிவிலியை அடையவே முடியாது. எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்று என்பது ஒரு குழப்பமாகவும் இருக்கும். இது அனைத்துமே B என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பொருந்தும்

B என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலம்

 • அதிகமான கற்பனை வளம் கொண்டவர்கள் , மிகச்சிறந்த படைப்பாளிகள்.
 • எப்போதுமே இலக்குகளை வைத்து, அதை நோக்கியே செயல்படுவார்கள். புதிது புதிதாக எதையேனும் கற்றுக்கொண்டே இருப்பார்கள்.
 • எளிதில் மற்றவர்களுடன் பழகி விடுவார்கள், அவர்களின் பலம், பலவீனம் தெரிந்து கொள்வார்கள்.ஆழமாக, அதிகமாக அன்பு செலுத்துவார்கள்.
 • நல்ல புரிந்து கொள்ளும் சக்தி கொண்டவர்கள்.போட்டித்தன்மை நிறைந்தவர்கள், சவால்களை எளிதில் எதிர்கொள்வார்கள்.
 • எதில் இருந்தும் பின்வாங்க மாட்டார்கள்தோல்வி அடைந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்

B எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலவீனம்

 • தனக்கென்று மரியாதை கொடுக்க வேண்டும், அவமரியாதை செய்யக்கூடாது என்பதை விரும்புவார்கள்.
 • தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், தன்னிடம் எல்லாரும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை இருக்கும்.
 • சின்ன சின்ன விஷயங்களுக்கு அடம் பிடிப்பார்கள். வளைந்து கொடுக்கும் தன்மை மிகவும் குறைவு. தன்னுடைய குணத்தை, அல்லது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற தீவிரமான எண்ணம் கொண்டவர்கள்.
 • சூழ்நிலைக்கேற்றவாறு புரிந்து கொண்டு கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் ஆனால் இவர்கள் இவர்களிடம் அந்த அளவுக்கு நெகிழ்வுத்தன்மை கிடையாது.
 • சில நேரங்களில் இவர்களுடைய பலமே பலவீனமாகவும், பலவீனம் பலமாகவும் மாறி விடுகிறது. அன்பாக இருந்தாலும் சரி, பகைமை உணர்வாக இருந்தாலும் சரி, இவர்கள் அதீதமாக அதை வெளிப்படுத்துவார்கள். சுய கௌரவம் மிகவும் முக்கியம் .

வாழ்வில் பெருமளவில் வெற்றி பெற்று விடுவார்கள்

இவர்களுடைய எதிர்மறையான விஷயங்கள் மற்றும் பலவீனங்களை தவிர்த்து பார்த்தால், B என்ற எண்ணில் பெயர் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் வாழ்வில் வெற்றி பெற்று விடுவார்கள். ஒரு நபர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன தேவை? நல்ல வேலை, பணம், சொத்து, வியாபாரம் செய்தால் வெற்றி, நல்ல குடும்பம், நண்பர்கள் - இவை அனைத்துமே பெரும்பாலானவர்களுக்கு கிடைத்துவிடும். தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட்டு, தன்னுடைய இலக்குகளை அடைந்துவிடும் திறன்களையும் வளர்த்துக் கொள்வதால் இவர்களுடைய வாழ்க்கை பெரிய போராட்டங்கள் எதுவும் எதிர்கொள்ள மாட்டார்கள்.

நட்பு, குடும்பம் மற்றும் சமூகம்.

எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட நேர்த்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் நண்பர்கள் உறவு காதல் திருமணம் என்று வரும்பொழுது ஆழமாக அன்பை வைத்துவிட்டு, ஒரு சில நேரங்களில் அதில் இவர்கள் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். எதிர்பார்க்கும் அளவுக்கு எதிர்த்தரப்பிலிருந்து அன்பு அல்லது காதலோ கிடைக்காமல் போகலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும். ஒரு சிலர் தனிப்பட்ட ரீதியாக தன்னுடைய வாழ்க்கையில் நிறைவில்லை என்பதை உணர்வார்கள்.

எண் கணிதம் மற்றும் வேத ஜோதிடத்தில் B என்ற எழுத்து – சுக்ரன் மற்றும் சந்திரனின் காரகம்

B என்ற எழுத்து, எண் கணிதத்தில் எண் 2 ஐக் குறிக்கிறது. எண் இரண்டு என்பது சந்திரனைக் குறிக்கும் கிரகம், எழுத்து B என்பது சுக்ரனின் காரகம் கொண்டது. இந்த எழுத்துக்கு இவை இரண்டுமே பொருந்தும். B என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு கற்பனை வளம், எழுத்து, படைப்புத்திறன், முயற்சி, தெளிவான சிந்தனை, ஆடம்பரமான வாழ்க்கை ஆகிய அனைத்துமே நிறைந்து காணப்படும்.

Also Read : A என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

Also Read : C என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Letter, Numerology, Tamil News