ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை மண்டல பூஜை.. முன்பதிவு செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

சபரிமலை மண்டல பூஜை.. முன்பதிவு செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

சபரிமலை

சபரிமலை

தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய கட்டணம் இல்லை. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவையில்லை.ஒரு கணக்கிலிருந்து 10 யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 27-ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் பெருவழிப்பாதை, சிறு வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்

டிசம்பர் 26 ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் 27 ஆம் தேதி மண்டல அபிஷேகத்தை அடுத்து கோயில் நடை மூடப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

நாளை தொடங்கும் இந்த மண்டல பூஜைக்கு எப்படி முன்பதிவு செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்….

  • தரிசனத்திற்கு விர்ச்சுவல் வரிசை கட்டாயம். sabarimalaonline.org எனும் சபரிமலையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இணையதளத்தில் முன்பதிவு செய்ய பக்தரின் பெயர், பிறந்த தேதி, பின் குறியீட்டுடன் கூடிய முகவரி, அடையாள அட்டையின் ஸ்கேன் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மின்னஞ்சல் ஐடியைப் உள்ளிட்டு ஒவ்வொரு பக்தருக்கும் தனிப்பட்ட கடவுச்சொல் உருவாக்கப்படும். பின்னர், விண்ணப்பதாரர் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார் என்பதை உறுதிப்படுத்தும் பெட்டியில் டிக் குறியை உள்ளிடவும். அதன் பிறகு பெறப்படும் OTP ஐ தளத்தில் உள்ளிட வேண்டும்.

இதையும் படிங்க டன் கணக்கில் தங்கம்.. ₹ 16,000 கோடி டெபாசிட்.. விப்ரோவையே ஓரம் தள்ளிய திருப்பதி.!

  • இப்போது பக்தர்களுக்காக தனிப்பட்ட கணக்குகள் உருவாக்கப்பட்டு விடும். பின்னர் இணையதளத்தில் உள்ள உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்து, பதிவின் போது உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • அடுத்து மெய்நிகர் வரிசைக்கான விருப்பத்தை கிளிக் செய்யவும். பக்தர்கள் தாங்கள் தரிசனம் செய்ய விரும்பும் தேதி மற்றும் நேரத்தை உள்ளிட வேண்டும். எல்லாம் முடிந்ததும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் போன்களில் தங்கள் பதிவு முடிந்துவிட்டதாக ஒரு செய்தியைப் பெறுவார்கள்.
  • தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய கட்டணம் இல்லை. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவையில்லை.ஒரு கணக்கிலிருந்து 10 யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் முறையில் தரிசன இடங்களை முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நேரடி முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலக்கல்லில் இதற்காக மட்டும் குறைந்தது 10 கவுன்ட்டர்கள் திறக்கப்படும் என்று கோவில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஞானபழத்திற்காக முருகன் கோபித்துக்கொண்ட இடம் தெரியுமா.... இமயமலையில் இருக்கும் ஒரே முருகன் கோவில்!

மலைக்கோயிலுக்கு ஏறுமுன் முன், பம்பாவில் உள்ள ஆஞ்சநேயா ஆடிட்டோரியம் அருகே கூப்பனின் அச்சிடப்பட்ட நகல் அல்லது மொபைல் போன் டிக்கெட்டுகளில் உள்ள டிஜிட்டல் படிவத்தை போலீசார் ஆய்வு செய்வார்கள்.

திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம்

திருவனந்தபுரம் மணிகண்டேஸ்வரம்

பந்தளம் வலியகோயிக்கல் கோவில்

செங்கனூர் ரயில் நிலையம்

எருமேலி

ஏட்டுமானூர்

வைக்கம்

பெரும்பாவூர்

கீழில்லை

நிலக்கல்

வண்டிப்பெரியார் சத்திரம் (வண்டிப்பெரியாரில் இருந்து கோயிலுக்கு வனப் பாதை)

செரியானாவட்டம் (பம்பா முதல் கோவில் வழி)

ஆகிய 12 இடங்களில் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதி இருக்கும்.

11 மற்றும் 12 தவிர அனைத்து இடங்களும் அடிப்படை நிலையமான பம்பாவிற்கு முன்பாக உள்ளன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala Ayyappan