முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மறந்தும் இந்தப் பொருட்களை மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்க வேண்டாம்..!

மறந்தும் இந்தப் பொருட்களை மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்க வேண்டாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

தானம் கொடுப்பது சிறந்த செயல் என்றாலும், தானம் வாங்குபவர்கள் ஒரு சில பொருட்களை தானமாக வாங்கவே கூடாது. எந்த பொருட்களை எல்லாம் தானமாக வாங்கக் கூடாது என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வலது கை கொடுக்கும் தானம், இடது கைக்கு தெரியக் கூடாது என்று கூறுவார்கள். தானம் கொடுப்பதை பறைசாற்றிக் கொள்ளக் கூடாது, அது சாதாரணமானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தானம் கொடுப்பது அதிகரித்து வருகிறது. பிறந்த நாள், திருமண நாள், நினைவு தினம் தவிர்த்து, பல விதமான பரிகாரங்கள், தோஷ நிவர்த்தி என்று பல பொருட்களை தானமாக கொடுப்பது பரவலாகக் காணப்படுகிறது. தானம் கொடுப்பது சிறந்த செயல் என்றாலும், தானம் வாங்குபவர்கள் ஒரு சில பொருட்களை தானமாக வாங்கவே கூடாது. எந்த பொருட்களை எல்லாம் தானமாக வாங்கக் கூடாது என்று பார்க்கலாம்.

இரும்பு பாத்திரங்கள் மற்றும் சாமான்கள் பொதுவாகவே ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையவை. இரும்பு பாத்திரங்கள் வாங்கும் பொழுது குறிப்பிட்ட நாள், நேரம் பார்த்து வாங்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். எனவே இரும்பு பாத்திரங்களை தானமாக வாங்கக் கூடாது. ஆனால் சனிதோஷம், சனி நிவர்த்தி செய்பவர்கள் பலரும் பரிகாரமாக இரும்பு பொருட்களை தான் தானமாக வழங்குவார்கள். இந்நிலையில், இரும்பு சாமான்களை தானம் பெறுபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

இரும்பு பாத்திரங்கள் ஆக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு, சுப காரியங்களுக்கு என்று எந்தவிதமான நல்ல நிகழ்ச்சிகளுக்கும் இரும்பு பொருட்களை தானமாக வழங்கக்கூடாது. அது மட்டுமல்லாமல் புது வீட்டுக்கு செல்லும் போது, கிரகப்பிரவேசமாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்கு குடி போவதாக இருந்தாலும் சரி, முதலில் பழைய இரும்பு பொருட்களை முதலில் எடுத்துச் செல்லக் கூடாது.

தானம் பெறுபவர்கள், உலோகங்கள் அல்லது இரும்பு சார்ந்த பொருட்களை பரிகாரமாக அல்லது தானமாக வழங்கினால், சுப நிகழ்ச்சிகளுக்கு, அதைத் தவிர்க்க வேண்டும்.

வெட்டும் பொருட்களை தானமாக பெறக் கூடாது  :  கத்தி, அரிவாள் மனை, கத்திரிகோல் போன்ற வெட்டப் பயன்படும் பொருட்களை தானமாக பெறக்கூடாது. இலவசமாக கொடுத்தால் கூட வாங்காதீர்கள்.

எண்ணெய் தானத்தை கோவிலுக்கு வழங்கலாம் : அதேபோல பரிகாரமாக எண்ணெய்யை தானமாக வாங்கவே கூடாது என்று கூறுவதுண்டு. எண்ணெய் தானம் செய்வது என்பது தோஷ நிவர்த்தியாகத் தான் செய்யப்படுகிறது. தோஷம் கழிப்பதற்கு அல்லது பரிகாரம் செய்வதற்கு பெரும்பாலும் நல்லெண்ணெய்யைத் தான் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, வயிற்றில் கொடி சுற்றி பிறந்த குழந்தையை முதன் முதலில் பார்க்கும் மாமா, சித்தப்பா, அத்தை போன்றவர்கள் எண்ணையில் தான் முதலில் குழந்தையின் முகம் பார்க்க வேண்டும். அவ்வாறு, தோஷ நிவர்த்தியாக பயன்படுத்தப்படும் எண்ணெய்யை கோவிலுக்கு கொடுத்து விடுங்கள், மற்றும் வேறு யாரும் தனிநபர்களுக்கு அல்லது குடும்பத்துக்கு தானமாக வழங்கக்கூடாது.

எண்ணெய் தானமாக பெற்றால், உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த காய்கறிகளை தானமாக பெறக் கூடாது :  பாகற்காய், சேப்பங்கிழங்கு, முள்ளங்கி, ஆகிய காய்கறிகளை நீங்கள் தானமாக வாங்கக் கூடாது. கசப்புச் சுவையுடைய பொருட்கள் மற்றும் திதி கொடுப்பதற்கு மட்டுமே சமைக்கப்படும் உணவுப் பொருட்கள், ஆகியவற்றை தானமாக பெறக்கூடாது.

First published:

Tags: Tamil News