கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை வாகனம் மதுரை புறப்பட்டது...
கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை வாகனம் மதுரை புறப்பட்டது...
தங்க குதிரை
Madurai chithirai Festival | சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்க குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் மதுரைக்கு புறப்பட்டன |
பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா தற்போது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதற்காக அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனமும் அதனை தொடர்ந்து அழகரின் ஊர்வலத்திற்காக சேஷ வாகனம் மற்றும் கருட வாகனமும் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்றது.
முன்னதாக இந்த தங்க குதிரை வாகனம் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனங்களுக்கு திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ பாதத்தினர் ( ஸ்ரீ கள்ளழகரை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்பும் வரை சுமப்பவர்கள்) மதுரைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் விரத ஐதீகப்படி இயற்கையான தோல் பையில் சிறிய பைப் மூலம் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். செயற்கையான, அதிக விசையுள்ள பிரஷர் பம்ப் பொருத்தி, திரவியங்கள் மற்றும் ரசாயன பொருட்களை கலந்து பீய்ச்ச கூடாது. இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதுடன், ஆடைகளும் வீணாகும் என்று அழகர் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.