Home /News /spiritual /

இன்று அட்சய திருதியை... பல்லியை கண்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகுமாம்...

இன்று அட்சய திருதியை... பல்லியை கண்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகுமாம்...

பல்லி

பல்லி

Akshaya Tritiya 2022 | இந்த அட்சய திருதியை நாளன்று பல்லியை கண்டு விட்டால் எல்லா  பாவமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சுமி கடாக்ஷத்துடன் வாழ்வர் என்பது ஐதீகம்...

    பல்லிக்கும், அக்ஷய திருதியைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ஒரு சுவாரசியமான தகவலை இந்த நன்னாளில் தெரிந்து கொள்ளலாம்...

    அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்

    1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்

    2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்

    3.திரேதா யுகம் ஆரம்பமான நாள்

    4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்

    5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்

    6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்

    7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்

    8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்

    9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்

    10.இந்நாளில் தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த அட்சய திரிதியயை சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடுகின்றோம். அட்சய திருதியை நாளில் மட்டும் இந்த பல்லிகள் யார் கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து பகவான் கட்டளையிட்டு உள்ளதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க எல்லா பல்லிகளும் இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம்...

    Also Read... அட்சய திருதியை 2022: தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

    இதனால் வீட்டில் உள்ளவர்களால் இந்த பல்லியை இன்றைய தினம் மட்டும் காண முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் கண்களில், அந்த பல்லி நீங்கள் பார்த்து விட்டால், உங்களது ஏழேழு ஜன்மத்து பாவமும், உங்களை பிடித்த தரித்திரமும் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.பல்லியை உங்களுடைய கண்களுக்கு காட்ட வேண்டும் என்று அந்த வாஸ்து பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நாம் செய்த பாவத்திற்கான தண்டனை குறைய வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டு, இன்றைய தினம் பல்லியை தரிசனம் செய்துதான் பாருங்களேன்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Akshaya Tritiya, Lizard

    அடுத்த செய்தி