• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஐப்பசி பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு காரணம் தெரியுமா?

ஐப்பசி பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு காரணம் தெரியுமா?

பெளர்ணமி

பெளர்ணமி

ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • Share this:
    பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுங்கள். வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

    அதேபோல், வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது நல்லது. ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

    முக்கியமாக, பெளர்ணமி நாளில், சிவனை தரிசனம் செய்வது நல்லது அதிலும் ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றும்.

    மேலும் படிக்க... இந்த வார ராசிபலன் யாருக்கெல்லாம் யோகம்ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவது வழக்கம். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

    அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன்.

    மேலும் அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் படிக்க... சாபங்களை போக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: