• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பெளர்ணமி அன்று கேட்க வேண்டிய ஸ்லோகம்!

பெளர்ணமி அன்று கேட்க வேண்டிய ஸ்லோகம்!

சிவன்

சிவன்

பௌர்ணமி தினத்தன்று இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

  • Share this:
    மாதத்தில் ஒரு முறை வரும் பௌர்ணமி தினத்தன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன்  நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்...

    ஸ்லோகம்

    ஓம் கமலவர்ணனே போற்றி
    ஓம் சித்திரை உருவே போற்றி
    ஓம் பயம் போக்குபவனே போற்றி
    ஓம் கால உருவே போற்றி
    ஓம் அந்தக நண்பனே போற்றி
    ஓம் ஞான உருவே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கணக்கனே போற்றி
    ஓம் தர்மராஜனே போற்றி
    ஓம் தேவலோக வாசனே போற்றி
    ஓம் ஆயுள் காரணனே போற்றி
    ஓம் மேன்மை தருபவனே போற்றி
    ஓம் குழந்தை வடிவினனே போற்றி
    ஓம் குளிகன் உருவினனே போற்றி
    ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
    ஓம் சித்திரகுப்தனே போற்றி

    ஸ்லோகம் சொல்லும் முறை

    பௌர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.

    மேலும் படிக்க... ஐப்பசி பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு காரணம் தெரியுமா?

    இந்த நன்னாளில் தெய்வங்களுக்கான விரதங்கள் இருப்பதும் இறைவழிபாடு மற்றும் தான தர்மங்கள் செய்வதும் சாலச் சிறந்ததாகும். இந்த பௌர்ணமி தினத்தன்று மேற்கூறிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதாலேயே ஒருவர் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.

    மேலும் படிக்க... ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

    மேலும் ஐப்பசி பௌர்ணமியன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது சிறப்பு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எனவே இன்று உங்களால் முடிந்த அளவுக்கு 4 பேருக்கு உணவு வழங்கினால் நல்லது. உங்கள் குலமே உணவுக்கு பஞ்சம் இன்றி வாழும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... ஐப்பசி மாத ராசி பலன்கள் (18.10.2021 முதல் 16.11.2021 வரை)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: