• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம்... தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்த ஆண்டாள் யானை...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம்... தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்த ஆண்டாள் யானை...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம்

இன்று ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு ஆண்டாள் யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

  • Share this:
    ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்று வந்த  புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தன் காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு ஆண்டாள் யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.



    மேலும் படிக்க... நாளை ஐப்பசி மாத பிரதோஷ விரதம்!

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.

    மேலும் படிக்க... சாபங்களை போக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: